பர்வதமலை மல்லிகார்சுனசுவாமி கோயில்

பர்வதமலை மல்லிகார்சுனசுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பர்வதமலை பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[2][3][4]

பர்வதமலை மல்லிகார்சுனசுவாமி கோயில்
பர்வதமலை மல்லிகார்சுனசுவாமி கோயில் is located in தமிழ் நாடு
பர்வதமலை மல்லிகார்சுனசுவாமி கோயில்
பர்வதமலை மல்லிகார்சுனசுவாமி கோயில்
மல்லிகார்சுனசுவாமி கோயில், பர்வதமலை, திருவண்ணாமலை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:12°26′18″N 78°58′19″E / 12.438465°N 78.971945°E / 12.438465; 78.971945
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை மாவட்டம்
அமைவிடம்:பர்வதமலை
ஏற்றம்:844 m (2,769 அடி)
கோயில் தகவல்
மூலவர்:மல்லிகார்சுனசுவாமி
தாயார்:பிரமராம்பிகை
குளம்:பாதாள சுனை தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்ரா பௌர்ணமி,
ஆடிப்பெருக்கு,
மகா சிவராத்திரி,
ஐப்பசி அன்னாபிசேகம்,
ஆருத்ரா தரிசனம்,
திருக்கார்த்திகை,
பங்குனி உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:கி. பி. மூன்றாம் நூற்றாண்டு
அமைத்தவர்:நன்னன் என்ற குறுநில மன்னர்[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 844 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பர்வதமலை மல்லிகார்சுனசுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12°26′18″N 78°58′19″E / 12.438465°N 78.971945°E / 12.438465; 78.971945 ஆகும்.

இக்கோயிலில் மூலவர் மல்லிகார்சுனசுவாமி மற்றும் தாயார் பிரமராம்பிகை ஆவர். இக்கோயிலின் தீர்த்தம் பாதாள சுனை தீர்த்தம் ஆகும்.[5] மல்லிகார்சுனசுவாமி, பிரமராம்பிகை, தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அகத்தியர், வீரபத்திரர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

சித்ரா பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Ravi (2023-01-03). "பர்வதமலை ஏறி சிவன் தரிசனம்". Inaiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.
  2. மாலை மலர் (2022-11-21). "பர்வதமலை மல்லிகார்ஜுனசாமி திருக்கோவில்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.
  3. "VELUDHARAN's TEMPLES VISIT : Sri Mallikarjuna Swamy Temple / Shri Malligarjuna Shivan Temple, Parvathamalai, Thiruvannamalai / Tiruvannamalai District, Tamil Nadu". VELUDHARAN's TEMPLES VISIT. 2016-03-29. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.
  4. "ஆகாயத்தில் ஒரு ஆலயம்: கயிலைக்கு அடுத்தபடியான பர்வதமலை ரகசியங்கள்!! -" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.
  5. "Mallikarjunaswami Temple : Mallikarjunaswami Mallikarjunaswami Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.

வெளி இணைப்புகள்

தொகு