பறகஹதெனிய மத்திய கல்லூரி

பறகஹதெனிய மத்திய கல்லூரி (Paragahadeniya Central College) இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் பறகஹதெனிய எனும் முஸ்லிம் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பாடசாலை ஆகும். இப்பாடசாலை 1940 டிசம்ம்பர் 3 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

தனது தகப்பனராகிய கலுகல்லை வெதராலகே பள்ளியடியான் மிஸ்கீன் லெப்பே என்பவரின் ஞாபகார்த்தமாக காலஞ்சென்ற கிராம விதானையாராகிய எம்.எல். எம் சலாஹீதீன் அவர்களால் 2 ஏக்கர் நிலம் பாடசாலைக்கென அன்பளிப்பு செய்யப்பட்டது. பின்னர் பொது மக்களின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்ட புதிய பாடசாலைக் கட்டடம் 1947 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ம் திகதி சேர். டி. பி. ஜாயா அவர்களினல் திறந்து வைக்கப்பட்டது. படிப்படியாக வளர்ச்சியடைந்து 1952-ல் மகா வித்தியாலயமாகவும் 1978-ல் மத்திய மகா வித்தியாலயமாகவும் தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 1994 ஆம் ஆண்டு தேசிய பாடசாலை என்ற அந்தஸ்தைப் பெற்றது.