து. பு. ஜாயா

(டி. பி. ஜாயா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

துவான் புர்ஹானுதீன் ஜாயா (Tuan Burhanuddin Jayah, சனவரி 1, 1890, - மே 31, 1960) அல்லது பொதுவாக ரி. பி. ஜாயா (T. B. Jaya) இலங்கையின் கல்விமானும், அரசியல்வாதியும் ஆவார்.

ரி. பி. ஜாயா
கொழும்பு மத்தி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1947 – 1952
இலங்கை அரசாங்க சபை உறுப்பினர்
பதவியில்
1936–1947
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினர்
பதவியில்
1924–1931
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 1, 1890
கலகெதரை, கண்டி
இறப்பு மே 31, 1960(1960-05-31) (அகவை 70)
தேசியம் இலங்கைச் சோனகர்
பெற்றோர் காசிம் ஜாயா, நோனா
பணி அரசியல்வாதி
தொழில் ஆசிரியர்
சமயம் இசுலாம்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் கலகெதரை என்ற ஊரில் காசிம் ஜாயா, நோனா ஆகியோருக்குப் பிறந்தார். கண்டியில் புனித பவுல் கல்லூரி, கல்கிசை புனித தோமையர் கல்லூரியிலும் கல்வி கற்றவர். 1913 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று கண்டி தர்மராஜா கல்லூரியில் சில காலம் பணியாற்றினார். பின்னர் பிரின்சு ஒஃப் வேல்சு கல்லூரியில் 1917 ஆம் ஆண்டு வரையும், பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1921 ஆம் ஆண்டில் கொழும்பு சாகிராக் கல்லூரியில் அதிபர் பதவியில் அமர்ந்தார். இவரது காலத்தில் இக்கல்லூரி கல்வியில் பெரும் வளர்ச்சி கண்டது. சாகிரா கல்லூரியின் கிளைப் பள்ளிகளை மாத்தளை, அளுத்கமை, புத்தளம் ஆகிய நகரங்களில் நிறுவினார்.

அரசியலில் தொகு

1924 ஆம் ஆண்டில் இவர் அரசியலில் இறங்கினார். அன்றைய பிரித்தானிய இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்கு 1924 ஆம் ஆண்டில் இலங்கை முசுலிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்த அதிகாரபூர்வமற்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழில் மற்றும் சமூக சேவைகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1931 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் கொழும்பு மத்தியில் போட்டியிட்டு ஏ. ஈ. முனசிங்கவிடம் தோல்வியுற்றார். பின்னர் 1936 இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் நியமன ஆங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1947 ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார்.

1947 ஆம் ஆண்டு இடம்பெற்ற 1947 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மத்திய தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. பாக்கித்தானுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றினார். இவர் 1960 ஆம் ஆண்டில் மெக்காவிற்கு புனித யாத்திரை சென்றிருந்த போது அங்கு காலமானார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=து._பு._ஜாயா&oldid=3725743" இருந்து மீள்விக்கப்பட்டது