பறக்காத பறவை

(பறக்காத பறவைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பறக்காத பறவைகள் பரிணாம வளர்ச்சியின் மூலம் பறக்கும் திறனை இழந்த பறவைகள் ஆகும்.[1] நன்கு அறியப்பட்ட தீக்கோழிகள், ஈமியூ,, காசோவரிகள், ரியாக்கள், கிவிக்கள், பென்குயின்கள் உட்பட 60 க்கும் மேற்பட்ட பறக்காத பறவை இனங்கள் உள்ளன.[2] மிகச்சிறிய பறக்க முடியாத பறவை அணுகமுடியாத தீவு இரயில் என்பதாகும், இதன் நீளம் 12.5 செ.மீ., எடை 34.7 கிராம். மிகப்பெரிய (கனமான மற்றும் உயரமான) பறக்காத பறவை, இது பொதுவாக வாழும் மிகப்பெரிய பறவை, தீக்கோழி (2.7 மீ, 156 கிலோ).

பென்குயின்கள் பறக்காத பறவைகளுக்கு நன்கு அறியப்பட்ட எடுத்துக்காட்டுகள் ஆகும்.

நியூசிலாந்திலேயே அதிக எண்ணிக்கையான பறக்காத பறவைகள் காணப்படுகின்றன. இதற்கான காரணம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் அங்கு குடியேறாதவரை மூன்று வகையான வௌவால்களைத் தவிர வேறெந்த நிலத்தில் வாழும் பாலூட்டிகளும் காணப்படாமையாகும். பறக்காத பறவைகளின் பிரதான எதிரிகளாக பெரிய பறவைகளே காணப்பட்டன. ஆனால் மனிதக் குடியேற்றத்தின் பின் பெருமளவு பறக்காத பறவையினங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பெரிய ஓக், டோடோ போன்றவை அவற்றுள் சில.

பறக்காத பறவைகளைப் பிடித்து வளர்ப்பது இலகுவானது. ஏனெனில் அவற்றுக்கு கூண்டுகள் தேவையில்லை. தீக்கோழிகள் இறகு, தோல், இறைச்சி என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காகப் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய பறக்காத பறவை தீக்கோழி ஆகும். அதுவே உயிர்வாழும் பறவைகளுள்ளும் பெரியது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "New Zealand Ecology – Moa". TerraNature. Retrieved 2007-08-27.
  2. Roots C. (2006). Flightless Birds. Westport: Greenwood Press. பக். XIV. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-33545-7. https://books.google.com/books?id=7PQD-0dYJLgC&q=%22thirty-eight%22+%22twenty-six%22&pg=PR14. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்காத_பறவை&oldid=3748062" இலிருந்து மீள்விக்கப்பட்டது