பறவைகளின் ஈடன்

பறவைகளின் ஈடன் (Birds of Eden) என்பது உலகின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாகும். இது தென்னாப்பிரிக்காவின் மேற்கு கேப் பிளெட்டன்பெர்க் விரி குடாவுக்கு அருகிலுள்ள குர்லாண்ட் கிராமத்தில் அமைந்துள்ளது.[2] இந்த சரணாலயத்தில் குவிமாடம் 2.3 எக்டேர்கள் (5.7 ஏக்கர்கள்) பரப்பில் வலைகளால் பழங்குடி காடுகளில் கட்டப்பட்டுள்ளது. இது தரை மட்டத்திற்கு மேல் 55 மீட்டர்கள் (180 அடி) உயரமுடையது. சுமார் 1.2 கிலோமீட்டர்கள் (0.75 mi) நடைபாதைகள், அவற்றில் 75% உயரமானவை. எனவே பார்வையாளர்கள் பறவைகளை அனைத்து மட்டங்களிலும் காண இயலும்.

பறவைகளின் ஈடன்
The aviary
Map
33°57′47″S 23°29′01″E / 33.963°S 23.4835°E / -33.963; 23.4835
திறக்கப்படும் தேதி2005-12-15
அமைவிடம்மேற்கு கேப், தென் ஆப்பிரிக்கா
நிலப்பரப்பளவு2.3 எக்டேர்கள் (5.7 ஏக்கர்கள்)[1]
விலங்குகளின் எண்ணிக்கை3000+[1]
உயிரினங்களின் எண்ணிக்கை280+[1]
வலைத்தளம்www.birdsofeden.co.za

தென்னாப்பிரிக்க விலங்கு சரணாலயம் கூட்டமைப்பில் (சாசா) உள்ள நான்கு சரணாலயங்களில் இந்த பறவைகள் சரணாலயமும் ஒன்று. இச்சரணாலயம் 2014இல் நான்கு முக்கியச் சுற்றுலா விருதுகளைப் பெற்றுள்ளது.[3] நான்கு விருதுகள், 'வனவிலங்கு எதிர்கொள்ளல்’, ஸ்கால் சர்வதேச நிலையான சுற்றுலா விருது, உலக பொறுப்பு சுற்றுலா விருது[4] மற்றும் உலகின் தங்க விருது ஆகியவற்றில் லிலிசெலா சுற்றுலா பார்வையாளர் அனுபவ விருது. 'சிறந்த விலங்கு நல முயற்சி' என்ற பிரிவில் பொறுப்புள்ள சுற்றுலா.[5]

வசதிகள் தொகு

 
மாஸ்ட்கள் மற்றும் கண்ணி

2.3-எக்டேர் (5.7-ஏக்கர்) கூண்டு அடைப்பு 3.2 எக்டேர்கள் (7.9 ஏக்கர்கள்) கம்பி வலையுடன் 28 பாய்மரத்தில் கம்பியின் உதவியால் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரதான கம்பியானது 2 மற்றும் 34 மீட்டர்கள் (6 அடி 7 அங் மற்றும் 111 அடி 7 அங்) வரை நீளத்தில் வேறுபடுகின்றது.[6][7]

பார்வையாளர்கள் சுமார் 1.2 கிலோமீட்டர்கள் (0.75 mi) நடைபாதை வழியாகப் பறவைகளைக் காண வசதிகள் உள்ளன. இவற்றில் 75% பறவைகளின் அனைத்து பகுதிகளிலும் பறவைகளைப் பார்க்கும்படி உயர்த்தப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் இந்த வசதியை வழிகாட்டிகளின் உதவியுடனோ அல்லது தாமாகவோ பயன்படுத்தலாம்.[8]

இந்த அடைப்பு பகுதியானது பூர்வீக காடுகளின் மீது கட்டப்பட்டுள்ளது. இதில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய இயற்கையாக அமைந்த பள்ளத்தாக்கு மற்றும் 200 இருக்கைகள் கொண்ட புறக்காட்சி மாடம் அமைந்துள்ளது.[1]

விலங்குகள் தொகு

 
நீல மற்றும் மஞ்சள் மக்கா
 
பறவை கூண்டு உள்ளே
 
பூநாரை
 
சேனல்-பில்ட் டக்கன்
 
கறுப்பு மூடிய கோனூர்
 
இண்சிவப்பு அரிவாள் மூக்கன்

2014ஆம் ஆண்டில் இந்த சரணாலயத்தில் 200க்கும் மேற்பட்ட சிற்றினங்களைச் சார்ந்த சுமார் 3500 பறவைகள் வசித்து வந்தன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "About Birds of Eden". birdsofeden.co.za. Birds of Eden. பார்க்கப்பட்ட நாள் 3 July 2011.
  2. "Frequently asked Questions". birdsofeden.co.za. Birds of Eden. பார்க்கப்பட்ட நாள் 3 July 2011.
  3. "The 2nd Lilizela Tourism Awards". lilizela.co.za. Lilizela Tourism Awards. Archived from the original on 2014-11-12. பார்க்கப்பட்ட நாள் 2014-11-12.
  4. "Skål International Sustainable Tourism Awards by Diversey Care 2014". skal.org. Skal International. Archived from the original on 2014-11-12. பார்க்கப்பட்ட நாள் 2014-11-12.
  5. "World Responsible Tourism Awards 2014". responsibletravel.com. World Responsible Travel. பார்க்கப்பட்ட நாள் 2014-11-12.
  6. Birds of Eden Information Booklet. 2008. 
  7. "Sneak Preview – Birds of Eden Sanctuary". firstflight.co.za. First Flight Birds and Rehabilitation Centre. Archived from the original on 4 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-01-17.
  8. "Bird Watching". nectar.co.za. Nectar Cottage. பார்க்கப்பட்ட நாள் 2009-01-17.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவைகளின்_ஈடன்&oldid=3562312" இலிருந்து மீள்விக்கப்பட்டது