பலதொழில்நுட்பப் பயிலகம்
பலதொழில்நுட்பப் பயிலகம் அல்லது பலதொழில்நுட்பக் கல்லூரி (Polytechnics) என்ற கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் புரட்சியை விரைவுபடுத்த பல தொழில்நுட்பங்களில் நுட்ப அறிவை பயிற்றுவிக்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்டவை. இவை எந்த பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்படாமல் மாநில அரசின் தொழில்நுட்ப கல்வித்துறையின் மேற்பார்வையில் இயங்குகின்றன.தேசிய அளவில் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் இவற்றை முறைப்படுத்துகிறது.
இவை தொழில்நுட்பப் படிப்பின் இறுதியில் பட்டயங்கள் வழங்குகின்றன. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் கற்கும் கல்வியின் சுருக்கமான பதிப்பாக இவை வழங்கும் கல்வி அறியப்படுகிறது. இப்பயிலகங்களில் பயின்றவர் அடிப்படை தொழில்நுட்ப திறனை கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர். தொழிலகங்களில் இவர்கள் மேற்பார்வையாளர்களாக அல்லது இளநிலை பொறியாளர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.
பலதொழில்நுட்பப் பயிலகங்களில் சேர குறைந்த தகுதி மாநில பள்ளியிறுதி பத்தாம் வகுப்பு சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பயிலகங்களில் பட்டயம் பெற்ற மாணவர் பல்கலைக்கழகங்களின் பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர தகுதியுடையவராகிறார்.
பிற நாடுகளில்
தொகுபெரும்பாலான நாடுகளில் பலதொழில்நுட்பக் கல்லூரியும் தொழில்நுட்பக் கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களாக விளங்குகின்றன. உலகளவில் பாலிடெக்னிக் என்ற ஆங்கிலச்சொல்லிற்கு உள்ள பொருள் நாட்டிற்கு நாடு மாறுபடுகிறது.
வெளியிணைப்புகள்
தொகு- Universities, Polytechnics and Colleges in Europe பரணிடப்பட்டது 2010-03-23 at the வந்தவழி இயந்திரம்
- All India Council For Technical Education பரணிடப்பட்டது 2005-09-21 at the வந்தவழி இயந்திரம்
- Higher Education Commission Pakistan பரணிடப்பட்டது 2008-01-02 at the வந்தவழி இயந்திரம்