பலபடிநீக்கம்

பலபடிநீக்கம் (Depolymerisation) என்பது ஒரு பலபடியை ஓர் ஒற்றைப் படியாக அல்லது ஒற்றைப்படிகளின் கலவையாக மாற்றுகின்ற செயல்முறையாகும் [1]. இதை பல்லுறுப்பு நீக்கம் என்றும் அழைப்பர். அனைத்து பலபடிகளும் அதிக வெப்பநிலையில் சிதைவடைகின்றன. இச்செயல்முறை பலபடியின் எண்ட்ரோப்பி அல்லது அகவெப்பம் அதிகரிப்பதனால் நிகழ்கிறது.

உச்சவரம்பு வெப்பநிலை

தொகு

பலபடிகளின் பலபடிநீக்கத் தன்மையை அவற்றின் உச்சவரம்பு வெப்பநிலை குறித்துக் காட்டுகிறது. இந்த வெப்பநிலையில், பலபடியாதலின் என்தால்பியானது ஒரு பெரிய மூலக்கூறை ஒற்றைப்படியாக மாற்றுவதன் மூலம் பெறப்பட்ட என்ட்ரோபியைப் பொருத்தது ஆகும். இந்த உச்சவரம்பு வெப்பநிலைக்கு மேல் பலபடிநீக்க வீதமானது பலபடியாதல் வீதத்தைவிட அதிகமாக உள்ளது. இது கொடுக்கப்பட்ட பலபடி உருவாதலை தடுக்கிறது. [2]

பொதுவான கரிமப் பலபடிகளின் உச்சவரம்பு வெப்பநிலை
பலபடி உச்சவரம்பு வெப்பநிலை (°செ)[3] ஒற்றைப்படி
பாலியெத்திலீன் 610 CH2=CH2
பாலி ஐசோபியூட்டைலீன் 175 CH2=CMe2
பாலி ஐசோபிரீன் (இயற்கை ரப்பர்) 466 CH2=C(Me)CH=CH2
பாலிமெத்தில்மெத்தாகிரைலேட்டு 198 CH2=C(Me)CO2Me
பாலிசிடைரீன் 395 PhCH=CH2
பாலிடெட்ராபுளோரோயெத்திலீன் 1100 CF2=CF2

.

பயன்பாடுகள்

தொகு

பலபடிநீக்கம் என்பது ஒரு பொதுவான செயல்முறையாகும். உணவு செரிமானம் ஆதல் கூட பெரிய மூலக்கூறுகளைச் சிதைத்து சிறிய புரத மூலக்கூறுகளாக மாற்றும் ஒரு பலபடிநீக்கச் செயல்முறையே ஆகும். இது பலபடி மறுசுழற்சியுடன் பொருத்தமானதாக உள்ளது. சிலவேளைகளில் பலபடிநீக்கம் மிகச்சரியாக நிகழ்ந்து தெளிவான ஒற்றைப் படிகள் மீளக் கிடைக்கின்றன. பாலியெத்திலீன் போன்ற மற்ற பலபடிகளின் பலபடிநீக்க வினையில் ஒற்றைப் படிகளின் கலவை கிடைக்கின்றது.

உயிரினத் தொகுதியிலிருந்து வேதிப்பொருள்கள் மற்றும் எரிபொருள்கள் உற்பத்தியுடனும் பலபடிநீக்கம் தொடர்பு கொண்டுள்ளது. இந்நிகழ்வில் வினைப்பொருள்கள் பொதுவாக தேவைப்படுகின்றன. தண்ணீரின் செயல்பாட்டினால் செல்லுலோசு நீராற்பகுப்பிற்கு உட்பட்டு குளுக்கோசு உருவாதல் ஓர் எளிய செயல்முறையாகும். பொதுவாக இந்தச் செயல்முறைக்கு ஓர் அமிலம் வினையூக்கியாகத் தேவைப்படுகிறது.

H(C6H10O5)nOH + (n - 1) H2O → n C6H12O6

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Depolymerization, IUPAC Goldbook
  2. Carraher Jr; Charles E (2010). "7". Introduction of Polymer Chemistry (2nd ed.). New York: CRC Press, Taylor and Francis. p. 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-0953-2.
  3. Stevens, Malcolm P. (1999). "6". Polymer Chemistry an Introduction (3rd ed.). New York: Oxford University Press. pp. 193–194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-512444-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலபடிநீக்கம்&oldid=3580798" இலிருந்து மீள்விக்கப்பட்டது