பலமுனை வரைவி

பலமுனை வரைவி (polygraph) கருவி பொய்யைக் கண்டுபிடிக்கும் கருவிகளில் (Lie Detector) ஒன்றாகும்.பொய்யை கண்டறியும் கருவிகளில் உலகில் பெருமளவில் பயன்படுத்தப்படுவது பொலிகிராப்பே ஆகும்.பொலிகிராப் கருவி ஜோன் ஆகஸ்டஸ் லார்சன் என்பவரால் 1921 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது லார்சன் பெகேர்லி போலீஸ் பணியகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்ததுடன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவனாகவும் விளங்கினார். சில நாடுகளில் நேர்முகப்பரீட்சைகளிலும் குற்றவாளிகளை விசாரிக்கும் போதும் பொய் சொல்வதை கண்டுபிடிக்க பலமுனை வரைவி பயன்படுத்தப்படுகின்றது. பலமுனை வரைவியின் உணரிகள் உடலின் குறித்த பாகங்களில் பொருத்தப்பட்டு இதயத்துடிப்பு, குருதியமுக்கம், தோலின் மின்கடத்துதிறன், சுவாச வீதம் என்பவற்றை அளவிடுகின்றன. நேர்முகத்தேர்வுகளிலோ அல்லது விசாரணையின் போதோ விடையளிக்கும் நபர் பொய்யுரைக்கும் சந்தர்ப்பத்தில் மேற்கூறிய இதயத்துடிப்பு,குருதியமுக்கம், தோலின் மின்கடத்துதிறன், சுவாச வீதம் என்பன மாற்றமடையும். இதன் மூலமாக பலமுனை வரைவி பொய் கூறியமையை கண்டுபிடிக்கும்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலமுனை_வரைவி&oldid=2279526" இலிருந்து மீள்விக்கப்பட்டது