பலானை கண்ணகை அம்மன் கோவில்
பலானை கண்ணகை அம்மன் கோவில் யாழ்ப்பாணம், கோப்பாயில், பலானை என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் கோவில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°41′0″N 80°03′0″E / 9.68333°N 80.05000°E |
பெயர் | |
பெயர்: | பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானம் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வடக்கு |
மாவட்டம்: | யாழ்ப்பாணம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கண்ணகை அம்மன் |
இணையதளம்: | கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் |
இக்கோயிலின் உள்வீதியில் காணப்படும் 25 அடி சுற்றளவுள்ள கூழாவடி மரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.[1] முன்னர் இக்கூழா மரத்தின் கீழ் கண்ணகி விக்கிரகம் வைத்து பூசைகள் நடந்திருக்கலாம். இன்றும் கூழா மரத்தடியில் மூலஸ்தான பூசைக்கு முன்பு சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன.[2]
இக்கோயிலில் பங்குனி மாதத் திங்கட்கிழமைகளில் பொங்கல் செய்து வழிபாடு நடைபெறுகிறது. 1973 ஆம் ஆண்டு வரை இக்கோவிலில் கொடியேற்றத்துடன் கூடிய மகோற்சவம் 25 நாட்கள் வரை நடைபெற்றது. பின்னர் ஆலய குருக்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இவ்வாலயம் 1974-1983 வரை மூடப்பட்டிருந்தது. பின்பு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமைய ஆலயம் திறக்கப்பட்டு, 1986 இல் குடமுழுக்கு நடைபெற்றது.[2]
தற்போது ஆடி மாதத்தில் 10 நாட்களுக்கு அலங்கார உற்சவங்கள் மட்டும் நடைபெறுகின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "பலானை கண்ணகை அம்மன் ஆலயம்". Archived from the original on 2015-04-05. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
- ↑ 2.0 2.1 2.2 "கண்னகை அம்மன்". Archived from the original on 2014-07-08. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.