பலூசிஸ்தான் விடுதலை முன்னணி

பலூசிஸ்தான் விடுதலை முன்னணி (Balochistan Liberation Front), பாக்கித்தானின் பலூசிஸ்தான் மாகாணம் மற்றும் ஈரானில் உள்ள சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணத்திலும் செயல்படும், பலூசிஸ்தான் தேசியவாத பிரிவினை அமைப்பாகும். இதனை தீவிரவாத அமைப்பாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பலூசிஸ்தான் விடுதலை முன்னணி
بلۏچستان آجوییءِ سنگر
தலைவர்(கள்)அல்லா நாசர் பலூச்சி (2009–தற்போது வரை)
செயல்பாட்டுப் பகுதி(கள்)பலூசிஸ்தான்
சித்தாந்தம்பலூச் தேசியம்
மார்க்சியம்-லெனினியம்[1]
நிலைசெயல்பாட்டில்
அளவுஅறியப்படவில்லை
வரும்படிகள்வெளிநாடுகளிலிருந்து
தீவிரவாத அமைப்பாக அறிவித்தது
பாக்கித்தான்

நோக்கம்

தொகு

பலூசிஸ்தானத்தையும் அதன் மக்களையும், ஈரான் மற்றும் பாகிஸ்தான் அரசுகள் மாற்றாந்தாய் மக்களாக பார்த்த காரணத்தினால், பலூசிஸ்தானின் முன்னேற்றத்திற்கான தேசியவாத உணர்வு பலூச்சி மக்களிடையே எழுச்சி பெற்றது.

வரலாறு & தாக்குதல்கள்

தொகு

இவ்வமைப்பை 1964ல் ஜும்மா கான் சிரியாவின் டமாஸ்கஸ் நகரத்தில் நிறுவினார். 1968-1973 காலத்தில் இவ்வமைப்பு ஈரானின் சீஸ்தான் மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்திலும், பின்னர் 1973-1977 காலங்களில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலும், பலூசிஸ்தான் தேசியவாதத்திற்கான கிளர்ச்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் ஈரான் மற்றும் பாகிஸ்தான் அரசுகள் இவ்வமைப்பின் செயல்பாடுகளை ஒடுக்கியதால், 20004ம் ஆண்டு வரை இதன் நிலை குறித்து அறியப்படவில்லை.

2009ல் இவ்வமைப்பின் தலைவராக அல்லா நாசர் பலூச் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னர், பலூசிஸ்தானில் உள்ள இராணுவத்தினர், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் தொடுத்தனர்.[2][3][4]

இவ்வமைப்பு பலுசிஸ்தான் விடுதலைப்படையுடன் இணைந்து 2007ல் பலூசிஸ்தான் மாகாணத்தில் 27 செய்தியாளர்களைக் கொன்றனர்.[5] Some other attacks for which group has claimed responsibility for are:

27 சூலை 2013 அன்று பாகிஸ்தானின் குவாடர் துறைமுக நகரத்தில் 24 கிளர்ச்சியாளர்களால், பாகிஸ்தானின் 7 கடலோரக் காவல் படையினரைக் கொன்று, இருவரை சிறை பிடித்தனர்.[6]

12 ஏப்ரல் 2015 அன்று பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்திலிருந்து, பலூசிஸ்தானில் கட்டிட வேலை செய்து வந்த 20 பேரை இவ்வமைப்பினர் சுட்டுக் கொன்றது.[7][8]

16 நவம்பர் 2017 அன்று புலம்பெயர்ந்த 15 தொழிலாளர்களை இவ்வமைப்பினர் சுட்டுக் கொன்றனர்.[9]இதற்கு மூளையாக செயல்பட்ட இவ்வமைப்பின் யூனுஸ் தௌகாலி எனும் ஒரு தளபதி, பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளால் நவம்பர் 2017ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Balochistan Liberation Front". Database of People with Extremist Linkages. பார்க்கப்பட்ட நாள் 1 December 2018.
  2. 2.0 2.1 "Security forces kill 'BLF commander involved' in Turbat massacre". Express Tribune. 17 November 2019. https://tribune.com.pk/story/1560848/1-security-forces-kill-blf-commander-involved-turbat-massacre/. 
  3. "Three labourers gunned down in Balochistan". Pakistan Today. 14 May 2019. https://www.pakistantoday.com.pk/2019/05/14/three-labourers-shot-down-another-injured-in-balochistan/. 
  4. "BBC correspondent in Quetta threatened by Baloch Liberation Front". Reporters Without Border (RSF). 1 August 2012.
  5. "In Balochistan, Violence Continues to Target Journalists". Radio Free Europe/Radio Liberty. 9 October 2014. https://pressroom.rferl.org/a/balochistan-journalists/26629476.html. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Bloodshed in Gwadar: Gunmen storm Coast Guards check post". The Express Tribune. 28 July 2013. https://tribune.com.pk/story/582934/bloodshed-in-gwadar-gunmen-storm-coast-guards-check-post/. 
  7. "20 labourers gunned down in Turbat" Dawn, 12 April 2015
  8. Zurutuza, Karlos. "Understanding Pakistan's Baloch Insurgency". The Diplomat. https://thediplomat.com/2015/06/cracking-pakistans-baloch-insurgency/. 
  9. "15 men from Punjab found dead in Kech". The Express Tribune. 15 November 2017. https://tribune.com.pk/story/1559105/1-15-bullet-riddled-bodies-found-turbat/.