பலேர் நீர்த்தேக்கம்

பலேர் ஏரி (Palair Lake) என்பது இந்தியாவின் தெலுங்காணாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள செயற்கையான நன்னீர் ஏரி ஆகும். இது இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இது கம்மம் மாவட்டத்தின் குசுமஞ்சி மண்டலத்தில் உள்ள பலேர் கிராமத்தில் அமைந்துள்ளது. கம்மம் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஏரி உள்ளது.[1] இந்த ஏரி நாகார்ஜுனா சாகர் திட்டத்தின் இடது கரை கால்வாயான லால்பகதூர் கால்வாயின் சமநிலை நீர்த்தேக்கமாகும். சுமார் 1,748 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியின் சேமிப்புத் திறன் 2.5 டி. எம். சி ஆகும். இந்த ஏரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. சுற்றுலா மேம்பாட்டிற்காக இந்த ஏரியில் நீர் சார்ந்த சாகச விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டன.[2][3] பலேர் நீர்த்தேக்க நீரைப் பயன்படுத்தி நீர் மின்சக்தியும் உருவாக்கப்படுகிறது.

பலேர் நீர்த்தேக்கம்
பலேர் நீர்த்தேக்கம் is located in தெலங்காணா
பலேர் நீர்த்தேக்கம்
பலேர் நீர்த்தேக்கம்
அமைவிடம்கம்மம் மாவட்டம், தெலுங்காணா
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா
நீர்க் கனவளவு2.5 பில்லியன் cubic feet (71 hm3; 57,000 acre⋅ft)

மேற்கோள்கள் தொகு

  1. "Palair Lake, Khammam". பார்க்கப்பட்ட நாள் 17 February 2013.
  2. "Palair Lake comes alive as Khammam festival takes off". The Hindu. January 19, 2006 இம் மூலத்தில் இருந்து 21 செப்டம்பர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060921071631/http://www.hindu.com/2006/01/19/stories/2006011912730300.htm. பார்த்த நாள்: 17 February 2013. 
  3. "'Allow free entry to children at resort'". The Hindu. September 8, 2007 இம் மூலத்தில் இருந்து 4 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071204163902/http://www.hindu.com/2007/09/08/stories/2007090858890400.htm. பார்த்த நாள்: 17 February 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலேர்_நீர்த்தேக்கம்&oldid=3249024" இலிருந்து மீள்விக்கப்பட்டது