பல்க்கர் மக்கள்
(பல்கர் மக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பல்க்கர் மக்கள் (Balkars) துருக்கிய இனத்தவராவர். இவர்கள் காக்கேசஸ் பகுதியிலுள்ள ரஷ்யக் குடியரசான கபர்தினோ-பல்கரீயாவின் முக்கிய இனக்குழுவினராக உள்ளனர். இவர்களுடைய கராச்சே-பல்கர் மொழி, வடமேற்குத் துருக்கிய மொழிகளின் பொண்டோ-காஸ்பிய துணை மொழிக் குழுவைச் சேர்ந்தது. இது, கிரீமிய தாத்தார் (Crimean Tatar) மற்றும் குமிக் (Kumyk) மொழிகளுக்கு உறவுடைய மொழியாகும்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(85,000[1]) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
ரஷ்யா (தெற்குக் கூட்டமைப்பு மாவட்டங்கள்) | |
மொழி(கள்) | |
Balkar dialect of கராச்சே-பல்கர், ரஷ்ய மொழி | |
சமயங்கள் | |
சுன்னி இஸ்லாம், ஷமனியம், Russian Orthodoxy | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஏனைய துருக்கிய மக்கள் |
பல்க்கர்கள், கி.பி. நான்காம் நூற்றாண்டளவில், காக்கேசியப் பகுதிக்குள் வந்த பல்கர் (Bulgar) என்னும் பழங்குடியினரின் மீந்த பகுதியினராக இருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர்.
2002 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ரஷ்யாவின் கபர்தீனோ-பல்கரீயா குடியரசில் 105,000 பல்கர்கள் உள்ளனர்.