பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியங்கள் என்பது பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்களின் அமைப்புக்கள் ஆகும். இவை பொதுவாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழாத இடங்களில் இருக்கும் பல்கலைக்கழங்களில் இயங்குகின்றன. இந்த ஒன்றியங்கள் தமிழ் மொழி, கலைகள், பண்பாடு, சமூகம் தொடர்பாக ஈடுபாடுள்ள மாணவர்களை ஈர்க்கின்றன. இனவாதம், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் மாணவர் சிக்கல்கள் மற்றும் பல பிற பிரச்சினைகள் தொடர்பாகவும் இவர்களில் பலர் அக்கறையுடன் செயற்படுகிறார்கள். சில நாடுகளில் பல்வேறு தமிழ் மாணவர் ஒன்றியங்களை இணைந்த மாணவர் பேரவைகளும் உள்ளன.

இவற்றையும் பார்க்க

தொகு