பல்துறை பெருநிறுவனக் குழுமம்
பல்துறை பெருநிறுவனக் குழுமம் என்று அறியப்படுவது பல்வேறு துறைகளில் ஈடுபடும் நிறுவனங்களை கொண்ட பெருநிறுவனக் குழுமம் ஆகும். இத்தகைய குழுமங்கள் பெரும்பாலும் சர்வதேச அளவில் செயல்படுவன.
விவரங்கள்
தொகுபல்துறை பெருநிறுவனக் குழுமம் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் இழப்பை குறைக்கின்றது. தமக்கு கீழ் செயல்படும் ஒரு கிளை நிறுவனத்தில் ஏற்படும் இழப்பை மற்றொரு கிளை நிறுவனத்தின் மூலம் சரிகட்டும் வாய்ப்பு உள்ளது.[1]
ஆனாலும் துறைகளுக்கு ஏற்ப இத்தகைய குழுமங்களை நிருவகிப்பது கடினம். பண்பாட்டு வேறுபாடுகளால் ஏற்படும் சிக்கல்கள், குறிப்பிட்ட ஒரு துறையின் மீது கவனம் செலுத்த முடியாமை, இதனால் குழுமம் தோல்வி காணும் அபாயம் என்று பல்துறை பெருநிறுவனக் குழுமங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அநேகம்.[2][3]