பல்லினப்பண்பாடு

(பல்பண்பாட்டியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பல்லினப் பண்பாடு (multiculturalism) எனப்படுவது, பல பண்பாட்டுக் கூறுகளின் பேணலிலும் பகிர்தலிலும் உருவாகும் ஒரு பண்பாட்டுச் சூழலைக் குறிப்பதாகும். தொழில் நுட்ப வளர்ச்சி, கல்வி மற்றும் அறிவில வளர்ச்சி, தொலைத் தொடர்புத் துறைகளீன் பெருக்கம், கட்டுப் பாடற்ற வர்த்தகம், சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறைகளின் வளர்ச்சி, அயல்நாடுகளில் ப்ணியேற்றல் பெருக்கம் ஆகியவையும் பல்வேறு நாட்டு மக்களிற்கிடையேயான நல்லுறவு நிலைகளும் நாடுகளின் அரசாங்கங்களின் நல்லிணக்க மனப் பான்மையும் இந்தப் பல்லினப் பண்பாடு உருவாவதற்கும் பேணபபடுவட்தற்கும் மிக அதிகமாக உத்வுகின்றன. அதனால் பல்லினப் பண்பாடுள்ள சமூகம் உருவாவது தவிர்க்க இயலாததாகி உள்ளது. இதற்கு 'உலகமயமாதல்' பெருந்துணை புரிகிறது.

பண்பாடு ஒரு பலக்கியக் கருப்பொருள். அதற்குப் பல நிலைகளில் வரையறை உள்ளது. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவுப் பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூகக் கட்டமைப்பு என்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.

பல்லினப் பண்பாட்டின் உருவாக்கத்துக்கு ஒரு முக்கியக் காரணம் 'உலகமயமாதல்' ஆகும். பல்லினப் பண்பாடு உலகப் பண்பாட்டின் ஒரு கூறு அல்லது அதன் வெளிப்பாடாகவும் விளங்குகிறது. பல்லினப் பண்பாட்டின் சிறந்த வெளிப்பாடு மிக்க இடங்களாக ரொறன்ரோ, மும்பாய், நியு யோர்க் முதலிய பெரு நகரங்கள் விளங்குகின்றன. கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா, அமேரிக்கா ஆகிய நாடுகளின் அரசாங்கக் கொள்கைகள் பலவும் பல்லினப் பண்பாட்டைப் பேணுபவையாக உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லினப்பண்பாடு&oldid=2922287" இலிருந்து மீள்விக்கப்பட்டது