பல்லவன் பொறியியல் கல்லூரி
பல்லவன் பொறியியல் கல்லூரி : (Pallavan Engineering College ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், காஞ்சிபுரத்தின் புறநகர் பகுதியான திம்மசமுத்திரத்தில், தேசிய நெடுஞ்சாலை 4 இல் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இது பல்லவன் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்வி நிறுவனமாகும்.
வரலாறு
தொகுபல்லவன் பொறியியல் கல்லூரி 1997 இல் ஒரு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டது. துவக்கத்தில் இக்கல்லூரியானது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. தற்போது இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, 4 ஆண்டு பொறியியல் படிப்புகளை வழங்குகிறது. மேலும் எஃசு எஃசு எல் சி முடித்தபின் 3 ஆண்டு தொழில்நுட்ப பட்டையப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு 3 ஆண்டு பட்டப் படிப்பை வழங்குகிறது.
வளாகம்
தொகுகல்லூரி வளாகமானது ஒரு ஆடுகளத்தைக் கொண்டுள்ளது. மேலும் கல்லூரியில் இதன் மாணவர்கள், ஊழியர்களின் தேவைக்காக விளையாட்டு அரங்கம், கட்டிடங்கள், ஆய்வகங்கள், சிற்றுண்டிச்சாலை போன்றவை உள்ளன. இக்கல்லூரி வளாகத்தில் மாணவர் விடுதி வசதியையும் கொண்டுள்ளது.
முன்னாள் மாணவர் சங்கம்
தொகுஇந்த கல்லூரியில் பயின்ற சில முன்னாள் மாணவர்கள் தொழில்நுட்பம், வணிகத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர்கின்றனர். உலகெங்கிலும் பரவியிருக்கும் முன்னாள் மாணவர்களுடன் தொடர்பு கொள்ள வசதியாக அண்மையில் ஒரு பிரத்யேக வலைத்தளம் உருவாக்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் சங்கம் பல பணிகளைத் தொடங்கியுள்ளது. அவற்றில் சில முன்னாள் மாணவர் உதவித்தொகைக்கான வழிகாட்டல், சர்வதேச அளவில் தொழில்நுட்ப மாநாடுகளில் ஆய்வேடுகளை வெளியிட நிதியுதவியளித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவது போன்றவற்றை மேற்கொண்டுள்ளது.
குறிப்புகள்
தொகு- தி இந்துவில் வெளியீடு [1] பரணிடப்பட்டது 2008-09-19 at the வந்தவழி இயந்திரம்