பல்லால சேனா

வங்காள மன்னன்

வல்லாலசேனா அல்லது பல்லால சேனா (Vallalasena or Ballala Sena) ( வங்காள மொழி: বল্লাল সেন; ஆட்சி: 1160–1179), வடமொழி இலக்கியத்தில் பல்லால் சென் என்றும் அழைக்கப்படும் இவன், இந்திய துணைக் கண்டத்தின் வங்காள பிராந்தியத்தின் சேனா வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளனாக இருந்தான்.[1] இவன் விஜய சேனாவின் மகனும் வாரிசுமாவான். மேலும், கோவிந்தபாலாவை தோற்கடித்து பாலப் பேரரசை முடிவுக்கு கொண்டுவந்தான்.[2]

பல்லால சேனா
বল্লাল সেন
ஆட்சிக்காலம்1160 – 1179
முன்னையவர்விஜய சேனா
பின்னையவர்இலட்சுமண சேனா
துணைவர்இரமாதேவி
குழந்தைகளின்
பெயர்கள்
இரூபசுந்தரி & கமலாதேவி
அரசமரபுசேனா
தந்தைவிஜய சேனா

பின்னணி தொகு

பல்லால சேனா மேலைச் சாளுக்கிய இராச்சியத்தின் இளவரசி இரமாதேவியை மணந்தான். இது சேனா ஆட்சியாளர்கள் தென்னிந்தியாவுடன் நெருக்கமான சமூக தொடர்பைக் கொண்டிருந்ததைக் குறிக்கிறது.[3]

இவன் மிகச் சிறந்த சேனா ஆட்சியாளனாக தனது இராச்சியத்தை பலப்படுத்தினான். வங்காளத்தில் ஒரு பாரம்பரியத்தின் படி, பல்லால சேனாவின் இராச்சியம் ஐந்து மாகாணங்களைக் கொண்டிருந்தது, அதாவது, பங்கா, பரேந்திரா, ரார், பக்ரி (கீழ் வங்காளத்தின் ஒரு பகுதி), மிதிலா மற்றும் தில்லி. பல்லால் சென் வங்காள அரச குடும்பத்திலிருந்து வந்தவன். தில்லிக்குச் சென்று, இந்துஸ்தானின் பேரரசரனாக அறிவிக்கப்பட்டான்.[4] ஆனால் இந்த பிராந்தியத்தில் கிடைத்த இரண்டு கல்வெட்டுகளோ அல்லது இவனது இரண்டு இலக்கியப் படைப்புகளோ,இவனது இராணுவ வெற்றிகளைக் குறிக்கவில்லை. மறுபுறம், இவை இவனுடைய கல்விசார் நடவடிக்கைகள் மற்றும் சமூக சீர்திருத்தங்களைக் குறிக்கின்றன.

இலக்கியப் பணி தொகு

அத்புத சாகராவில் உள்ள ஒரு பத்தியின் படி, பல்லால சேனா, தனது மகன் லட்சுமண சேனாவை விட்டு தனது ராணியுடன் வெளியேறி , கங்கை, யமுனை ஆறுகளின் சங்கமத்திற்கு சென்று தனது வயதான காலத்தில் ஓய்வு பெற்றான்

ஒரு சேனா கல்வெட்டின் படி, இவன் ஒரு எழுத்தாளனாவான். இவன் 1168 இல் தானசாகரா[5] என்ற நூலையும்,1169 ஆம் ஆண்டில், "அத்புதசாகரா" என்ற முடிக்கப்படாத நூலையும் எழுதினான்.[1] விஜய சேனா உயிருடன் இருந்தபோது பல்லால சேனா மிதிலாவை வென்றான் என்று அத்புதசாகரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..[6] மேலும் இவன் இந்து சாதி மற்றும் திருமண விதிகளை அறிமுகப்படுத்தினான்.[1]

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Misra, Chitta Ranjan (2012). "Vallalasena". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Vallalasena. 
  2. Sen, Sailendra Nath (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 35–36. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-80607-34-4. 
  3. Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib by Nitish K. Sengupta p.51
  4. Asiatic Journal and Monthly Miscellany https://books.google.com.bd/books?id=ILRAAQAAIAAJ&pg=PA41&lpg=PA41&dq=dhee+sen+of+delhi&source=bl&ots=OfWC0r7jCh&sig=ACfU3U1ULfYO38-9Z5Vj06trnFgLJFmk1w&hl=en&sa=X&ved=2ahUKEwji17eCsrHpAhVXxTgGHUYDBcwQ6AEwC3oECAgQAQ#v=snippet&q=Ballal%20sen%20delhi&f=false
  5. Phyllis Granoff, My Rituals and My Gods: Ritual Exclusiveness in Medieval India, Journal of Indian Philosophy, Vol. 29, No. 1/2, Special issue: Ingalls Festschrift (April 2001), pp. 109-134
  6. Chowdhury, AM (2012). "Sena Dynasty". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Sena_Dynasty. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லால_சேனா&oldid=3195946" இலிருந்து மீள்விக்கப்பட்டது