பல்லிமண்ணா சிவன் கோயில்
பல்லிமண்ணா சிவன் கோயில்(Pallimanna Siva Temple) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் கும்பலங்காடு என்னும் கிராமத்தில் உள்ள கோவிலாகும்.இந்த கோயில் வடக்கஞ்சேரியில் கும்பலங்காடு - காஞ்சிரகோடு சாலையில் அமைந்துள்ளது.இக்கோவிலின் சுவரோவியங்கள் 1983ம் ஆண்டில் இந்திய தொல்பொருள் மையத்தால் பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டன.[1][2].சிவன் இந்த கோவிலின் முக்கிய தெய்வம் ஆகும்.இந்த கோயில் வஜனி அணையில் இருந்து உருவாகும் அலூர் என்னும் சிறிய ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
Pallimanna Siva Temple | |
---|---|
கோயிலின் பக்கக் காட்சி | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | திருச்சூர் மாவட்டம் |
அமைவு: | கும்பலங்காடு, திருச்சூர் |
ஆள்கூறுகள்: | 10°40′22.67″N 76°13′38.83″E / 10.6729639°N 76.2274528°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளா பாணி |
கோவிலின் அமைப்பு
தொகுஇந்த கோயில் சதுர வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கேரளாவில் உள்ள பழமையான திராவிட பாணியில் கட்டப்பட்ட கோயில்களுக்கு எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது.கோயிலின் மேற்கூரை செப்புத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது.
கோவிலின் சுவரோவியங்கள்
தொகுஇக்கோயிலில் உள்ள சுவரோவியங்கள் 17 முதல் 18 ஆம் நூற்றாண்டுகளில் வரையப்பட்டதாக கருதப்படுகிறது.[3] இந்த சுவரோவியங்களில் சிவன்,மோகினி,மகாலட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, பல கண்களைக் கொண்ட இந்திரன்,கோபால கிருஷ்ணன் ஆகியோர் உருவங்களும் கிராதர்ஜுனியம்,ஸ்ரீ இராமர் பட்டாபிஷேகம்,கிருஷ்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கிப்பிடித்தல்,சிவன் ஜலந்தரா எனும் அரக்கனை அழித்தல் ஆகிய காட்சிகளும் உள்ளன.பழைய மலையாள எழுத்துகளைக் கொண்ட ஓவியங்களில் ஒன்று ஓவியரின் பெயரையும் அவரது குருவின் பெயரையும் குறிப்பிடுகிறது.இது ஓவியங்களின் காலத்தைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
படங்கள்
தொகு-
Entrance
-
River
-
Oottupura
மேற்கோள்கள்
தொகு- ↑ "ASI Monuments in Thrissur". ASI. Archived from the original on 2013-06-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-30.
- ↑ "Pallimanna Siva Temple". Ishtadevatha. Archived from the original on 2014-08-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.
- ↑ "Pallimanna Siva Temple". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.