பல்லே ரகுநாத ரெட்டி

இந்திய அரசியல்வாதி

பல்லே ரகுநாத ரெட்டி (Palle Raghunatha Reddy) ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதியாவார். இவர், 2014 முதல் 2019 வரை புட்டபர்த்தி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

பல்லே ரகுநாத ரெட்டி
தகவல் மற்றும் மக்கள் தொடர்பு, தகவல் மற்றும் தொழில்நுட்பம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில்
08 ஏப்ரல் 2014 – 1 ஏப்ரல் 2017
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
வேலைஅரசியல்வாதி

இவர் முதன்முதலில் 1999 இல் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நல்லமடா தொகுதியிலிருந்து சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தலைமை அரசாங்க கொறடாவாக பணியாற்றினார் [1] ஆனால் கட்சிக்குள் இருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். [2] 2007ல் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

இவர், முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து விசாகப்பட்டினத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் ஏபி கிளவுட் இமுன்முயற்சியைத் தொடங்கினார். [4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லே_ரகுநாத_ரெட்டி&oldid=3820847" இலிருந்து மீள்விக்கப்பட்டது