பளிங்கு அரண்மனை விலங்குக்காட்சிசாலை

இந்தியாவின் வடக்கு கொல்கத்தாவில் பளிங்கு அரண்மனை (கொல்கத்தா) அமைந்துள்ளது. இது ஒரு அரண்மனை மாளிகையாகும். 1835ஆம் ஆண்டில் ராஜா ராஜேந்திர முல்லிக் என்பவரால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. அழகான மேற்கத்தியச் சிற்பங்கள், விக்டோரியன் தளபாடங்கள் துண்டுகள், மற்றும் ஐரோப்பிய மற்றும் இந்தியக் கலைஞர்களின் ஓவியங்கள். பெரிய சரவிளக்குகள், கடிகாரங்கள் மற்றும் மன்னர்கள் மற்றும் இராணிகளின் மார்பளவு சிலைகள் அரண்மனையின் மண்டபங்களை அலங்கரிக்கின்றன. இந்த அரண்மனை பளிங்கு சுவர் மற்றும் தளங்கள், பழங்காலப் பொருட்கள், ரூபன்ஸ் ஓவியங்கள், கியூரியஸ், பளிங்கு சிலைகள், நிலைக் கண்ணாடிகள் மற்றும் அரிய பறவைகளின் சேகரிப்புக்குப் பிரபலமானது. பளிங்கு அரண்மனை பயன்பாட்டில் உள்ளபோதும், பார்வையாளர்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. அரண்மனையினைப் பார்வையிட அரசு சுற்றுலா அலுவலகத்திலிருந்து அனுமதி பெறப்பட வேண்டும்.

பளிங்கு அரண்மனை விலங்குக்காட்சிசாலை
பளிங்கு அரண்மனை
Map
22°34′55″N 88°21′34″E / 22.5820°N 88.3595°E / 22.5820; 88.3595
திறக்கப்பட்ட தேதி1854[1]
அமைவிடம்கொல்கத்தா, இந்தியா
உறுப்புத்துவங்கள்CZA[2]

அரண்மனைக்கு அடுத்து பளிங்கு அரண்மனை விலங்குக்காட்சிசாலை (Marble Palace Zoo) அமைந்துள்ளது. இது இந்தியாவில் ராஜா ராஜேந்திர முல்லிக்கால் திறக்கப்பட்ட முதல் மிருகக்காட்சிசாலையாகும். தற்போது பறவை காட்சிகூடம் மயில்கள், தூக்கான், நாரைகள் மற்றும் கொக்குகளுடன் பார்வைக்கு உள்ளது .

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Zoos in India, from 1800 until now". kuchbhi.com. Kuchbhi. Archived from the original on 21 October 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2011.
  2. "Search Establishment". cza.nic.in. CZA. பார்க்கப்பட்ட நாள் 4 July 2011.

வெளி இணைப்புகள்

தொகு