பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையம்

பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையம் (Cluster Resource Centre- CRC) இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அந்தந்த மாநில அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட மையங்கள் ஆகும். அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள இமட்மையங்கள் ஒன்றிய அளவில் செயல்படும் வட்டார வள மையங்களின் கீழ் செயல்படுகிறது. ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் அனுபவங்கள் மற்றும் கற்பித்தலில் புதுமைகளை பற்றி பகிர்ந்து கொள்ளவும் இம்மையம் உதவுகிறது. சராசரியாக 50 ஆசிரியர்களுக்கு ஒரு பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையம் என்ற ரீதியில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கேற்ப இம்மையங்களின் எண்ணிக்கை மாறுபடக்கூடும். வட்டார வள மையங்களில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்|ஆசிரியர் பயிற்றுநர்கள் இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்கள்.[1].தமிழ்நாட்டில் மொத்தம் 4088 பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. [2]

பணிகள் தொகு

பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையங்கள் பின்வரும் பணிகளைச் செய்கின்றன.

  • கருத்தாய்வு மையத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி அளித்தல்[3]
  • ஆசிரியர்களுக்கு செயலாராய்ச்சி செய்ய வழிகாட்டுதல். அதன் முடிவுகளை அதனை மற்ற ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல்
  • ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் மேற்கொள்ளும் புதிய உத்திகள் மற்றும் அணுகுமுறைகளை பிற ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்துதல்
  • பள்ளி வளர்ச்சிக்குத் தேவையான பயிற்சிகளைக் கண்டறிந்து திட்டமிட்டு பயிற்சியை வழங்குதல்.

மேற்கோள்கள் தொகு

  1. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (2009). இந்தியக் கல்வி முறை. சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். பக். 192 இம் மூலத்தில் இருந்து 2017-07-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170712194600/http://www.textbooksonline.tn.nic.in/Books/DTEd/DTEd2-IES.pdf. பார்த்த நாள்: 2017-06-27. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-21. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
  3. [1]