பள்ளிப் பேருந்து
பள்ளிப் பேருந்து (School bus) என்பது பள்ளிக்குச் சொந்தமான, குத்தகைக்கு அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்டோ இயக்கப்படும் பேருந்து ஆகும். பள்ளிக்கு அல்லது பள்ளி தொடர்பான நடவடிக்கைகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு இது வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. [1] உலகம் முழுவதிலும் பல்வேறு வடிவமைப்புகள் பள்ளிப் பேருந்துகளில் காணப்படுகிறது. பரவலாக பள்ளிப் பேருந்துகளில் மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது.
வட அமெரிக்காவில், பள்ளிப் பேருந்துகள், கூட்டாட்சி மற்றும் மாநில/மாகாண விதிமுறைகளுக்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் மஞ்சள் வண்ணத்திற்கும் கூடுதலாக எச்சரிக்கை விளக்குகள் மற்றும் பல பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. [2]
வடிவமைப்பின் வரலாறு
தொகு19 ஆம் நூற்றாண்டு
தொகு19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், அமெரிக்கா மற்றும் கனடாவின் பல கிராமப்புறங்களில் ஒரு வகுப்பறை கொண்ட பள்ளிகள் நடைபெற்றன. நடந்து செல்ல இயலாத அளவில் உள்ள தூரத்தில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்காக குதிரை வண்டி ஏற்பாடு செய்யப்பட்டது. [3]
வடிவமைப்பு மீள்பார்வை
தொகுதேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) ஆகியவற்றின் படி, பள்ளி பேருந்துகள் சாலை வாகனங்களிலே பாதுகாப்பான வகையாகும். [4] சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஐந்து இறப்புகள் பள்ளிப் பேருந்தினால் பள்ளி வயதுக் குழந்தைகள் இறக்கின்றனர்.இது தானுந்தில் செல்வதை விட 70 மடங்கு பாதுகாப்பானது. [5]
சான்றுகள்
தொகு- ↑ "National School Transportation Specifications and Procedures 2015 Edition" (PDF). pp. 342–343. Archived from the original (PDF) on 2017-06-30. பார்க்கப்பட்ட நாள் 2017-10-02.
- ↑ Highway Safety Program Guidelines: Pupil Transportation Safety பரணிடப்பட்டது 2011-12-31 at the வந்தவழி இயந்திரம். National Highway Traffic Safety Administration website. Retrieved 2010-06-23.
- ↑ Mark Theobald (2004). Wayne Works. Coachbuilt.com. Retrieved 2010-04-26
- ↑ Dr Kristin Poland of NTSB, quoted at a hearing into a fatal 2012 bus crash at Chesterfield, Missouri, in "Buses safer than cars", Circular, Bus and Coach Association of New Zealand, August 2013.
- ↑ amy.lee.ctr@dot.gov (2016-09-09). "School Bus Safety". NHTSA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-08.