பள்ளி மன்றம்

பள்ளி மன்றம் அல்லது பள்ளிக் கூட்டம், (School assembly) என்பது பள்ளியில் உள்ள அனைவருமோ அல்லது குறிப்பிட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமோ ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக கூடுவதனைக் குறிப்பதாகும்.[1] சில பள்ளிகளில், மாணவர்கள் ஒரு பொதுவான பாடல் அல்லது பிரார்த்தனை செய்வதற்காகக் கூடி, ஏதேனும் அறிவிப்புகள் இருந்தால் பெறுகின்றனர். அத்தகைய கூட்டங்களில் வழக்கமாக வருகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படலாம். கல்வி, சுகாதாரம் அல்லது பாதுகாப்புப் பொருட்கள் அல்லது பள்ளி நாடகங்கள், திறமை நிகழ்ச்சிகள் செயல்படுவதற்காக அவ்வப்போது பள்ளிக் கூட்டங்கள் நடைபெறலாம்.

சிங்கப்பூர், நான் ஹுவா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளிக் கூட்டம்
டெக்சாசின் ஹியூஸ்டனில் உள்ள மாணவர்கள் யுக் கேம் ஷோ அறிவியல் மன்றத் திட்டத்தில் தன்னார்வத் தொண்டு செய்கின்றனர்.

வரலாறு தொகு

பழங்காலத்திலிருந்தே மன்றங்கள் செயல்பாட்டில் உள்ளன. பழங்கால குருகுலத்தில், மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி, தியானம் செய்து, சபைகளில் தங்கள் அன்றாட வழக்கத்தைப் பற்றி விவாதிப்பார்கள். கூடுதல் மற்றும் வழிபாடு என்பது இங்கிலாந்தில் உள்ள மன்றச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும் மற்றும் பள்ளிகளில் அதிகாரப்பூர்வமான தேவையாக உள்ளது. [2]

கூறுகள் தொகு

பிரார்த்தனை, செய்திகள்,மாணவர்களிடையே விவாதங்கள், மாணவர்களின் பேச்சு போட்டி, மாணவர்களுக்கு வெகுமதி அளித்தல் அல்லது பாராட்டுதல் மற்றும் பிற முக்கிய விவாதங்கள் ஆகியவை இந்த மன்றச் செயல்பாடுகளில் நடைபெறுகிறது.

நாடுகள் தொகு

சீனா தொகு

சீனப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை காரணமாக, கூட்டங்கள் பொதுவாக வெளியில் நடத்தப்படுகின்றன. பள்ளி வாரம் அல்லது மாதத்தின் தொடக்கத்தில் பள்ளித் தலைவர் மாணவர்களிடம் ஒரு மணி நேரம் உரையாற்றுவது வழக்கமாக உள்ளது.

பாக்கித்தான் தொகு

மன்றங்கள் அல்லது கூட்டங்கள் வழக்கமாக ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சமாக 20 நிமிடங்கள் நடைபெறும். ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு பொதுவான பிரார்த்தனையை மேற்கொள்கிறார்கள். அதில்,சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன மற்றும் மாணவர்களுக்கான வருகைப் பதிவு குறிக்கப்படுகிறது. சில நேரங்களில் மாணவர்கள் ஒரு சிறுகதை அல்லது கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள்.

அயர்லாந்து தொகு

அயர்லாந்தில் உள்ள உரோமன் கத்தோலிக்கப் பள்ளிகளில் பெரும்பாலும் காலை கூட்டங்களில் பிரார்த்தனை நடைபெறுகிறது.

சான்றுகள் தொகு

  1. "School Assembly". wordreference.com. பார்க்கப்பட்ட நாள் 10 July 2017.
  2. "Education Act 1944 (Hansard)". hansard.millbanksystems.com. பார்க்கப்பட்ட நாள் Oct 28, 2020.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளி_மன்றம்&oldid=3600573" இலிருந்து மீள்விக்கப்பட்டது