பழமையான குர்ஆனிய கையெழுத்துப் பிரதிகள்
இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, மூன்றாவது இஸ்லாமியத் தலைவர் (கலிஃபா) உஸ்மான் (உத்மான்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 955-960) குர்ஆன் தற்போதுள்ள வடிவத்தில் தொகுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. ஜெர்மனி அரசாங்கத்தால் நிதியுதவி அளிக்கப்பட்ட ஆராய்ச்சி அமைப்பான கார்பஸ் கோரனிகம் (Corpus Coranicum) தளத்தின் கருத்துப்படி, 2000 க்கும் மேற்பட்ட ஃபோலியோக்கள் (4000 பக்கங்கள்) உட்பட 60 க்கும் மேற்பட்ட கையெழுத்துப்பிரதி துண்டுகள் கிடைத்துள்ளன. இவைகள் இஸ்லாமிய நபியாகிய முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு 350 ஆண்டுகளுக்குள் (கி.பி. 950 க்குள்) எழுதப்பட்ட கையெழுத்து பிரதிகள் ஆகும். [1] இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது அவர்களின் மரணத்திற்கு பிறகு, 7 நூற்றாண்டுகளில் (கி.பி. 1200 - 1215) எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹிஜாஜி கையெழுத்துப் பிரதிகள்
தொகுஸனா கையெழுத்துப் பிரதி
தொகுதற்போதுள்ள மிகப் பழமையான குர்ஆனிய கையெழுத்துப் பிரதிகளில் ஸனா கையெழுத்துப் பிரதி ஒன்றாகும். 1972 ஆம் ஆண்டில் யேமனில் ஸனாவின் பெரிய மசூதியை மறுசீரமைப்பு செய்யும் போது குர்ஆன் சம்மந்தப்பட்ட மற்றும் குர்ஆனுக்கு சம்மந்தமில்லாத வேறு சில கையெழுத்துப் பிரதிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த கையெழுத்துப் பிரதிகள் காகிதத்தோல் (parchment) என்று அழைக்கும் தோல் சுருள்களில் எழுதப்பட்டு இருந்தது. முக்கியமாக, இந்த சுருள்களில் இரண்டு முறை எழுதப்பட்டு இருந்தது. அதாவது தோல் சுருள்களில் முதல் முறை எழுதப்பட்டு, பல ஆண்டுகள் கழித்து, அந்த எழுத்துக்களை கழுவி துடைத்துவிட்டு, மறுபடியும் எழுதப்பட்டு இருந்தது, இதனை பாலிம்செஸ்ட் என்பார்கள்(இரண்டு அடுக்கு உரைகள் கொண்ட சுருள்கள்). மேல் உரை (வசனங்கள்) உஸ்மான் தொகுத்த குர்ஆனின் வசனங்களுக்கு ஒத்துப்போகிறது. அதேசமயம் கீழ் உரையில் இருக்கும் வசனங்கள் உஸ்மானின் குர்ஆனோடு பல வகைகளில் வேறுபட்டு வித்தியாசமான வார்த்தைகளை கொண்டுள்ளது. கீழ் உரையின் வசனங்கள் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்டது. [2] ரேடியோகார்பன் பகுப்பாய்வு முறையின் படி, கீழ் உரையின் எழுத்துக்கள் கி.பி. 671ம் ஆண்டுக்குள் எழுதப்பட்டு இருக்கலாம் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது, மேலும் இது 99% சரியான கணக்கெடுப்பாக இருக்கும் என்றும் நம்பப்படுகின்றது. [3]
கோடெக்ஸ் பாரிசினோ-பெட்ரோபொலிட்டனஸ்
தொகுகோடெக்ஸ் பாரிசினோ-பெட்ரோபொலிட்டனஸ் என்று அழைக்கப்படுபவை முன்னர் இருந்த இரண்டு பழமையான குர்ஆனிய கையெழுத்துப் பிரதிகளின் பகுதிகள் என்று கருதப்படுகின்றன. எஞ்சியிருக்கும் பெரும்பாலான குர்ஆனிய கையெழுத்துப் பிரதிகளின் பெரும்பான்மையான சிறு துண்டுகள் பிப்லியோதெக் நாஷ்னல் டி பிரான்ஸில், பி.என்.எஃப் அராபே 328 (ab) என்ற பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. 46 கையெழுத்து பக்கங்கள் ரஷ்யாவின் தேசிய நூலகத்திலும், ஒரு கையெழுத்துப் பக்கம் வத்திக்கான் நூலகத்திலும், இன்னொரு கையெழுத்துப் பக்கம் கலிலி சேகரிப்பிலும் வைக்கப்பட்டுள்ளன.
பி.என்.எஃப் அராபே 328 (c) மற்றும் பர்மிங்காம் கையெழுத்துப்பிரதி துண்டுகள்
தொகுமுக்கிய கட்டுரை: பர்மிங்காம் குர்ஆன் கையெழுத்துப் பிரதி
பி.என்.எஃப் அராபே 328 (ab) கையெழுத்துப் பிரதிகள் பி.என்.எஃப் அராபே 328 (c) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது, இதில் 16 கையெழுத்துப்பிரதி பக்கங்கள் உள்ளன, [4] இரண்டு கூடுதல் பக்கங்கள் 2015ம் ஆண்டு பர்மிங்காமில் கண்டுபிடிக்கப்பட்டது (மிங்கானா 1572a, இது தொடர்பில்லாத வேறு ஒரு குர்ஆன் கையெழுத்துப் பிரதியோடு பிணைக்கப்பட்டுள்ளது). [5] [6]
இந்த கையெழுத்துப் பிரதி 7 ஆம் நூற்றாண்டின் மத்திய காலக்கட்டத்துக்கு சம்மந்தப்பட்ட பிரதியாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது: பர்மிங்காம் கையெழுத்துப் பிரதி தோல் சுருளின் காலம் கி.பி. 568 மற்றும் 645 க்கு இடையில் இருக்கும் என்று கார்பன் பகுப்பாய்வு என்ற விஞ்ஞான முறையின் மூலமாக கண்டுபிடித்துள்ளார்கள். இந்த பகுப்பாய்வின் நம்பகத்தன்மை 97.2% என்று கணக்கிட்டுள்ளார்கள், இதன் பொருள், அந்த தோல் சுருள் எந்த விலங்கிலிருந்து தயாரிக்கப்பட்டதோ, அந்த விலங்கு மேற்கண்ட காலக்கட்டத்தில் வாழ்ந்து இருந்திருக்கின்றது என்பதாகும்.
பஸ்தத் என்ற ஊரின் அமர் இப்னு அல்-அஸ் என்ற மசூதியின் குர்ஆன் கையெழுத்துப் பிரதிகளின் கிடங்கில் இருந்த பல பிரதிகளின் ஒரு பகுதியாக பி.என்.எஃப் அராபே 328 (c) என்ற கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. இதனை பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கீழ்த்திசை நாடுகள் மொழிகளைக் கற்றறிந்த அறிஞர் ஜீன் லூயிஸ் அசெலின் டி செர்வில்லே (1772-1822) வாங்கினார். இவர் கி.பி. 1806-1816 காலகட்டத்தில் கெய்ரோவில் ஆலோசனை பிரிவின் துணைத்தூதுவராக பணியாற்றினார்.
பாரிஸ் மாநகரில் வைக்கப்பட்டுள்ள 16 கையெழுத்துப் பிரதிகளில் குர்ஆனின் (அத்தியாயம்) ஸூரா 10:35 முதல் 11:95 வரையிலும், 20:99 முதல் 23:11 வரையிலும் உள்ள வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. பாரிஸ் பிரதிகளில் உள்ள வசனங்களின் தொடர்ச்சியாக, பர்மிங்காம் பிரதிகளின் வசனங்கள் உள்ளன. மேலும் குர்ஆனின் அத்தியாயங்கள் 18, 19 மற்றும் 20க்கு சம்மந்தப்பட்ட சில வசனங்களும் பர்மிங்காம் பிரதிகளில் காணப்படுகின்றது. இந்த பிரதிகளில் உள்ள வசனங்கள் அத்தியாய வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன, மேலும் சில அலங்கார குறியீடுகளும் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு வசனத்துக்கும் இடையே வித்தியாசத்தை காட்டும் குறியீடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்புகள்
தொகு- ↑ Its official website says : "Mehr als 60 Fragmente mit insgesamt mehr als 2000 Blättern (4000 Seiten) sind als Textzeugen für den Koran vor 800 bisher bekannt." https://corpuscoranicum.de/
- ↑ Sadeghi, Behnam; Goudarzi, Mohsen (2012). "Ṣan‘ā’ 1 and the Origins of the Qur’ān". Der Islam 87 (1-2): 1–129. doi:10.1515/islam-2011-0025. http://pl.scribd.com/doc/110978941/Sanaa-1-and-the-Origins-of-the-Qur-An.
- ↑ Sadeghi, Behnam; Bergmann, Uwe (2010). "The Codex of a Companion of the Prophet and the Qurʾān of the Prophet". Arabica 57 (4): 343–436. doi:10.1163/157005810X504518. https://www.scribd.com/doc/130854520/The-codex-of-a-companion-of-the-Prophet-SAW-Benham-Sadeghi-Bergmann.