பழுப்பு வசீகரன்

பூச்சி இனம்
பழுப்பு வசீகரன்
ஈரமான காலத்து வடிவம்- மேல்புறம்
ஈரமான காலத்து வடிவம், கீழ்ப்புறம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: லெப்பிடாப்பிடிரா
குடும்பம்: நிம்பாலிடே
பேரினம்: ஜூனோனியா
இனம்: ஜூ. லெம்னோனியசு
இருசொற் பெயரீடு
ஜூனோனியா லெம்னோனியசு
(லின்னேயஸ், 1758)
துணையினம்
  • ஜூ. லெ. லெம்னோனியாசு
  • ஜூ. லெ. வைசியா (புருக்டோர்பர், 1912)
வேறு பெயர்கள்
  • பாப்பிலியோ லெம்னோனியசு லின்னேயஸ், 1758
  • பாப்பிலியோ ஆனோயசு லின்னேயஸ், 1758
  • பிரிசியசு லெம்னோனியசு புருக்டோர்பர், 1912

பழுப்பு வசீகரன் (lemon pansy)( ஜூனோனியா லெம்னோனியசு) என்பவை தெற்காசியாவில் காணப்படும் வரியன்கள், சிறகன்கள், வசீகரன்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினம் ஆகும். இது தோட்டங்கள், தரிசு நிலப்பகுதிகள் மற்றும் திறந்த வனப்பகுதிகளில் காணப்படுகின்றன. பழுப்பு நிற இறகுகளின் ஓரத்தில் அடர் பழுப்பு நிறக் கோடும், இறகுகளின் மேற்புறம் கண்கள் போன்ற மஞ்சள் புள்ளியும், மத்தியில் ஆரஞ்சு நிற வளையமும் காணப்படும். தரையை ஒட்டி சுறுசுறுப்பாக பறந்து திரியும். அனைத்து வாழிடங்களிலும் ஆண்டு முழுவதும் காணலாம்.[1]. இவை ஆண்டு முழுவதும் காணப்பட்டாலும், மழைக் காலத்திலும் மழைக்குப் பின்னும் அதிகமாகத் தென்படுகின்றன. மழைக் காலத்தில் இதன் நிறம் பளிச்சென்றும், கோடைக் காலத்தில் நிறம் மங்கியும் காணப்படும். அப்போது காய்ந்த இலைகளைப் போன்ற உருமறைப்புத் தோற்றத்தைப் பெறுவதற்கு இந்த தகவமைப்பு உதவுகிறது.[2]

வாழ்க்கை சுழற்சி தொகு

முட்டை தொகு

இலைகளின் அடிப்பகுதியில் முட்டைகள் தனித்தனியாக இடப்படும். முட்டை பச்சை நிறத்தில் பீப்பாய் வடிவத்தில் நீளமான முகடுகளுடன் இருக்கும்.

கம்பளிப்பூச்சி தொகு

முட்டையிலிருந்து பொரித்து வெளிவரும் கம்பளிப்பூச்சி உருளை வடிவமானது. வடிவில் ஒரே மாதிரியான தடிமன் கொண்டது. நுனியில் கிளைத்திருக்கும் முதுகெலும்புகளின் வரிசைகளால் மூடப்பட்டிருக்கும். இது மங்கலான நீல நிற ஒளிப்புடன் மந்தமான கருப்பு மற்றும் இருண்ட நிறத்தின் முதுகுப் பட்டையைக் கொண்டுள்ளது. தலைக்கு பின்னால் தனித்த ஆரஞ்சு வளையம் உள்ளது. கம்பளிப்பூச்சி இலையின் அடிப்பகுதியில் தங்கி உணவு உண்ணும். ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால், உருண்டு தரையில் விழும்.[3]

கூட்டுப்புழு தொகு

கூட்டுப்புழுவாதல் நிகழ்ச்சி தரையில் நெருக்கமாக அடர்த்தியான பகுதியில் நடைபெறுகிறது. கூட்டுப்புழு கரடுமுரடான மேற்பரப்பில் சிறிய கூம்பு போன்ற செயல்முறைகளுடன் உள்ளன. கூட்டுப்புழு பல்வேறு பழுப்பு நிற பட்டைகள் மற்றும் நேர்த்தியான கோடுகளுடன் நன்கு உருமறைக்கப்பட்டு காணப்படும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. காடு இதழ், தடாகம் வெளியீடு 2016 மே-சூன் பக்: 40
  2. ஆதி வள்ளியப்பன் (7 அக்டோபர் 2017). "வண்ணத்துப்பூச்சிக்கு சிமெண்ட் தரை பிடிக்குமா?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2017.
  3. 3.0 3.1   இந்தக் கட்டுரை இப்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள ஒரு பிரசுரத்தின் உரையை உள்ளடக்கியது: Charles Thomas Bingham (1905). Fauna of British India. Butterflies Vol. 1. பக். 357–358. https://archive.org/stream/butterfliesvolii00bing#page/356/mode/2up/. 

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்பு_வசீகரன்&oldid=3606839" இலிருந்து மீள்விக்கப்பட்டது