பழையர் என்போர் சங்ககாலத்துப் பழங்குடி மக்கள். தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டைத் தாண்டிச் செல்லும் எல்லைப் பகுதிகளிலும் வாழ்ந்துவந்தனர். தழையாடையைத் துணிக்கு மேல் ஒப்பனைக்காக உடுத்தும் பழக்கம் உடையவர்கள். வழிப்போக்கர்களுக்கும் விருந்தளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். கொற்கையில் வாழ்ந்த இந்த மக்கள் முத்துக் குளித்து வாழ்ந்துவந்தனர்.

பாண்டியனின் கொற்கைத் துறைமுகத்தில் பழையர் பழங்குடி மக்கள் நிறைநிலா நாளின் அந்தி வேளையில் தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், சங்குகளையும் போட்டு கடல் தெய்வத்தை வழிபட்டனர். [1]

பொருள் தேடிச் சென்ற தமிழர், பழையர் குடிமக்கள் வாழ்ந்த நாட்டைக் கடந்து சென்றனர்.[சான்று தேவை] அந்த நாட்டில் அவர்களுக்குத் தழையாடை பழையர் மகளிர், கரடி உண்ட புலால் மிச்சிலை மூங்கில் குழாயில் பக்குவப்படுத்திச் சேமித்து வைத்திருந்து எல்லாத் தெருக்களிலும் வழிப்போக்கர்களுக்குப் பகிர்ந்தளித்து உண்பர். [2]

பழையன் என்னும் பெயர்கொண்ட அரசர்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்.

அடிக்குறிப்புதொகு

  1. விறல்போர்ப் பாண்டியன் புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்றுறை அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து தழையணி அணிந்த கோடு ஏந்து அல்குல் பழையர் மகளிர் பனித்துறை பரவ, பகலோன் மறைந்த அந்தி, ஆர் இடை உரு கெழு பெருங்கடல் உவவு கிளர்ந்து ஆங்கு அலர் மன்று பட்டன்று - அகம் 201-7
  2. அகம் 331-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழையர்&oldid=2946209" இருந்து மீள்விக்கப்பட்டது