பழையாறு (ஆறு)
தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறிய ஆறுகளில் ஒன்றாகும்.
பழையாறு தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறிய ஆறுகளில் ஒன்றாகும். மகேந்திரகிரி மலையின் வட மேற்கு திசையில் 17.6 கட்டை (கிலோ மீட்டர்) தொலைவில் அமைந்துள்ள சுருளோடு என்னும் இடத்திலிருந்து உற்பத்தியாகிறது. சுருளோடு கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆறு 44 கட்டை தூரம் ஓடி மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கின்றது. இந்த ஆற்றின் மூலம் 16550 ஏக்கர் ஆயக்கட் நிலம் விவசாய பயனடைகின்றது.
தடுப்பணைகள்
தொகுஇந்த ஆற்றின் குறுக்கே 14 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்று முக்கியமானவை:
- வீரப்புலி
- குட்டை
- பள்ளிகொண்டான்
- சட்டுப்புதூர்
- செட்டித்தோப்பு
- வீரமங்கலம்
- சபரி
- குமரி
- சோழந்தட்டை
- பிள்ளைப் பெத்தான்
- மிசன்
தமிழகத்தில் மழைபெய்கின்ற வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலங்களில் இவ்வாற்றில் தண்ணீர் ஓடும். முந்தைய காலங்களில் மக்கள் இவ்வாற்று நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தினர்.
தற்போதய நிலை
தொகு- மக்களின் கவனக் குறைவால் இந்த ஆறு மிகவும் மாசு அடைந்துள்ளது.
- தோவாளை, அனந்தனூர் மற்றும் என்பி சானல் ஆகியவற்றிலிருந்து கலக்கும் கழிவு நீர் இந்த ஆற்றை மிகவும் மாசு அடையச் செய்து வருகின்றது.
- தடுப்பணைகள் பல கவனிப்பாரின்றி, அதன் மதகுகள் துருப்பிடித்து, நீரை தேக்கமுடியாத நிலை உள்ளது.
- வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் பக்கத்து நகரங்களிலிருந்து கொண்டுவந்து கொட்டப்படும் கழிவுகள் ஆகியவற்றால் இந்த ஆறு சாக்கடை ஓடும் கால்வாயாக மாற்றியுள்ளது.
- ஆற்றின் கரையோரங்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு, குறுகி, சிறிய கால்வாயாக மாறி வருகின்றது.