பழைய காயல் சங்குமுகேசுவரர் கோயில்

பழைய காயல் சங்குமுகேசுவரர் கோயில் என்பது என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய காயல் என்ற ஊரில் உள்ள சிவன் கோயில் ஆகும்.[1]

அமைவிடம்

தொகு

இக்கோயில் தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் தூத்துக்குடியில் இருந்து 16 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. பழைய காயலுக்கு முந்தைய பேருந்து நிறுத்தமான இரட்சண்யபுரம் நிறுத்தத்தில் இறங்கி கோயிலுக்கு செல்லலாம்.

கோயில் அமைப்பு

தொகு

இந்தக் கோயில் முகமண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற கூறுகளைக் கொண்டுள்ளது. இதில் முக மண்டபம் மகாமண்டபம் போன்றவை நாயக்கர் காலத் திருப்பணியாகும். முகமண்டபத்தில் நவக்கிரகம், காலபைரவர் சிற்றாலயங்கள் உள்ளன. அர்த்த மண்டபத்தின் வாயிலில் பிள்ளையார், முருகர், பிரதோச நந்தீசுவரர் திருமேனிகள் உள்ளன. கோயில் கருவறையில் சங்குமுகேசுவரர் உள்ளார். கருவறையின் தேவ கோட்டத்தில் தென்முகக் கடவுள், துர்கை சந்நிதிகள் உள்ளன. கருவறையின் மீதுள்ள விமானம் நகர வடிவில் அமைக்கபட்டுள்ளது. மூலவரின் சந்திதிக்கு வலப்பக்கமாக கமலாம்பிகையின் கோயில் உள்ளது. கமலாப்பிகையின் வலக்கையில் நீலோத்பவ மலரை ஏந்தியும், இடக்கையை தொங்கவிட்டபடியும் உள்ளார்.[2]

வழிபாடு

தொகு

இக்கோயிலில் ஒருகால பூசை நடக்கிறது. ஆடி அமாவசை, தை அமாவசை, ஆணி திருவோண நட்சத்திர நாளில் நடக்கும் வருசாபிசேகம் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "District Wise Temple list". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. "முக்தி அளிக்கும் சங்குமுகேஸ்வரர்!". 2023-09-07. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)