பழைய காயல்

தூத்துக்குடி மாவட்ட சிற்றூர்

பழைய காயல் (Palayakayal) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம் தொகு

பழைய காயல், மாவட்ட தலைநகரான தூத்துக்குடியிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவைகுண்டத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 633 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

வரலாறு தொகு

இந்த ஊரானது ஒரு காலத்தில் காயல் என்று அழைக்கபட்டது. இது பாண்டியர் துறைமுகங்களில் ஒன்றாக இருந்தது. பாண்டியர் படைகளுக்காக இந்த துறைமுகம் வழியாக அரேபியக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் இங்குவந்த மார்கோ போலோ இங்கு நடந்த முத்துக் குளித்தல் பற்றியும், குதிரை இறக்குமதி பற்றியும் எழுதியுள்ளார்.[2]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Palayakayal Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "பொருநைக் கரையில் அரேபியக் குதிரை". Dailythanthi.com. 2018-10-06. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_காயல்&oldid=3856763" இலிருந்து மீள்விக்கப்பட்டது