பவன் காந்த் முஞ்சால்

பவன் காந்த் முஞ்சால் (Pawan Kant Munjal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். ஒரு கோடீசுவரராகவும் ஈரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அறியப்படுகிறார். [1] மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில்,உலகின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம் ஈரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஆகும். இந்தியா டுடே இதழ், 2017 [2] ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 50 சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் இவர் 49 ஆவது இடத்தைப் பிடித்தார்.

பவண் முஞ்சால்
Pawan Munjal
பிறப்பு1954 (அகவை 69–70)
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்தேசிய தொழில்நுட்ப நிறுவனம், குருசேத்ரா
பணிதலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, ஈரோமோட்டோ கார்ப்
பெற்றோர்பிரிச்மோகன் லால் முஞ்சால்

2022 ஆம் ஆண்டு மே மாத கணக்கெடுப்பின்படி, இவருடைய சொத்து நிகர மதிப்பு US$3.4 பில்லியன்[3] என மதிப்பிடப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடத்திய வழக்கை தொடர்ந்து அமலாக்க இயக்குனரகம் [4]இவருடைய குடியிருப்பில் சோதனை நடத்தியது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Pawan Munjal elevates as Chairman of Hero Moto Corp". Indian Express இம் மூலத்தில் இருந்து October 31, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151031052454/http://www.newindianexpress.com/business/news/Pawan-Munjal-Takes-Over-as-Chairman-of-Hero-MotoCorp/2015/06/01/article2844119.ece. பார்த்த நாள்: 1 June 2015. 
  2. "India's 50 powerful people". India Today. April 14, 2017. http://indiatoday.intoday.in/story/india-today-top-50-powerful-indians-mukesh-ambani-ratan-tata-kumar-mangalam-birla-gautam-adani-anand-mahindra-srk-amitabh-bacchan/1/928939.html. 
  3. "Forbes profile: Pawan Munjal & family". Forbes. பார்க்கப்பட்ட நாள் 27 May 2022.
  4. Raj, Neha (2023-08-01). "ED Conducts Raids at Hero MotoCorp CEO Pawan Munjal's Residence in Connection with DRI Case". PUNE NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவன்_காந்த்_முஞ்சால்&oldid=3978385" இலிருந்து மீள்விக்கப்பட்டது