பவய் ஏரி
மும்பையில் உள்ள ஒரு ஏரி
பவய் ஏரி அல்லது பொவாய் ஏரி, மும்பை நகரத்தின் புறநகர் மாவட்டத்தில் உள்ள பவய் பகுதியில் உள்ள ஒரு மனிதர்களால் வெட்டப்பபட்ட ஒரு செயற்கை ஏரியாகும். மும்பை இந்திய தொழில்நுட்பக்கழகம் இந்த ஏரியி்ன் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.[1] இந்த ஏரி வெட்டப்பட்ட போது இதன் பரப்பளவு 2.1 ச.கி.மீ (520 ஏக்கர்கள்) ஆகவும் ஆழம் கரையோரத்தில் 3 மீட்டர் (9.8 அடி) முதல் அதிகபட்ச ஆழமாக 12 மீட்டர் (39 அடி) வரையும் இருந்தது.[2] இந்த ஏரி நீர் காலப்போக்கில் மாசடைந்து குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த ஏரி சுற்றுலாப்பயணிகளைக் கவரக்கூடிய இடமாக உள்ளது. இந்த ஏரியிலிருந்து மித்தி ஆறு உற்பத்தி ஆகிறது.
பவய் ஏரி | |
---|---|
அமைவிடம் | மும்பை, மகாராஷ்டிரா |
ஆள்கூறுகள் | 19°08′N 72°55′E / 19.13°N 72.91°E |
வடிநிலப் பரப்பு | 6.61 km2 (2.55 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச ஆழம் | 12 மீ (39 அடி) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 58.5 மீ (191.93 அடி) |
குடியேற்றங்கள் | பொவாய் |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Powai lake". Archived from the original on 2014-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-08-30.
- ↑ "History Of Powai Lake". Members.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-24.