பவுலா ஆக்கின்சு
பவுலா ஆக்கின்சு (Paula Hawkins, பிறப்பு: 26 ஆகத்து 1972) என்பவர் ஆங்கிலப் பெண் எழுத்தாளர், மற்றும் புதின ஆசிரியர் ஆவார். சிம்பாப்வே நாட்டில் பிறந்த பிரிட்டிசுகாரர்.
தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றை ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார். டைம்ஸ் பத்திரிகையில் பணியில் சேர்ந்தார். தனி இதழாளராக சில இதழ்களில் எழுதினார். பெண்களுக்கு நிதி அறிவுரைகள் வழங்கி ஒரு நூலை எழுதினார்.[1]
2009 ஆம் ஆண்டில் ஆக்கின்சு காதல், நகைச்சுவை நிரம்பிய புதினங்களை ஆமி சில்வர் என்னும் புனை பெயரில் எழுதத் தொடங்கினார்.
2015 ஆம் ஆண்டில் தி கேர்ல் ஆன் தி டிரெயின் என்ற பெயரில் உளவியல் சார்ந்த, திகில் நிறைந்த கதையை எழுதிப் புகழ் பெற்றார்.[1][2] இந்தப் புதினத்தை திரைப்படமாக உருவாக்கி 2016 இல் வெளியிட்டனர். வீட்டில் வன்முறைகள், மதுவின் கேடுகள், போதைப் பொருள்களின் தீய விளைவுகள் பற்றிய கதை இது. பவுலா ஆக்கின்சு இண்டு தி வாட்டர் என்ற இரண்டாம் புதினமும் எழுதியுள்ளார்.
மேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 Alter, Alexandra (30 January 2015). "Welcoming the Dark Twist in Her Career". New York Times. https://www.nytimes.com/2015/01/31/books/paula-hawkinss-journey-to-the-girl-on-the-train.html. பார்த்த நாள்: 17 July 2015.
- ↑ Saner, Emine (21 April 2015). "The Girl on the Train: how Paula Hawkins wrote ‘the new Gone Girl’". The Guardian. https://www.theguardian.com/books/2015/apr/21/the-girl-on-the-train-paula-hawkins-new-gone-girl-female-thriller-authors-gillian-flynn. பார்த்த நாள்: 17 July 2015.