பவுல் வில்லார்டு மெரில்
பவுல் வில்லார்டு மெரில் (Paul Willard Merrill) (ஆகத்து 15, 1887 –ஜூலை 19, 1961) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் கதிர்நிரலியலில் வல்லுனர் ஆவார்.[1] இவர் தான் முத்ன்முதலில் S-வகை விண்மீன்களை 1922 இல் வகைபடுதியவர் ஆவார்.[2]
பவுல் வில்லார்டு மெரில் Paul W. Merrill | |
---|---|
பிறப்பு | பவுல் வில்லார்டு மெரில் ஆகத்து 15, 1887 |
இறப்பு | July 19, 1961 | (அகவை 73)
தேசியம் | அமெரிக்கர் |
பணி | வானியல் |
செயற்பாட்டுக் காலம் | 1913–1952 |
அறியப்படுவது | கதிர்நிரலியலைப் பயன்படுத்தி நெட்டலைவுநேர மாறும் விண்மீன்களின் ஆய்வு |
இவர் 1913 இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் கழித்தார். இவர் அங்கிருந்து 1952 இல் ஓய்வுபெற்றார்.இவர் கதிர்நிரலியலைப் பயன்படுத்தி விகுடவுன் பல்கலைக்கழக்த்தைச் சார்ந்த கிரைகு கென்னடியுடன் இணைந்து இயல்பிகந்த விண்மீன்களை ஆய்வு செய்தார். குறிப்பாக நெட்டலைவு நேர மாறும் விண்மீன்களை ஆய்வு செய்தார். விரவிய உடுக்கணப் பட்டைகள் உட்பட, உடுக்கண ஊடகத்தினை ஆய்வு செய்தார். ஓய்வு பெறுவதற்குச் சற்று முன்னர், இவர் மாறும் விண்மீனாகிய ஆர் ஆந்திரமேடாவிலும் பிற சிவப்பு விண்மீன்களிலும் டெக்னீசியம் நிலவுவதைக் கண்டுபிடித்தார். டெக்னீசியத்துக்கு நிலைப்புள்ள ஓரகத் தனிமங்கள் ஏதும் இல்லாததால், விண்மீனில் அது அண்மையில் தான் உருவாகியிருக்க வேண்டும், விண்மீனில் S வகை அணுக்கருத் தொகுப்பு நிகழ்தலுக்கு இது ஒரு நல்ல எடுத்துகாட்டாகும்.
தகைமைகள்
தொகுதகைமைகளும் விருதுகளும்
- அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழக என்றி டிரேப்பர் விருது (1945)[3]
- பசிபிக் வானியல் கழகத்தின் புரூசு பதக்கம் (1946)[4]
- அமெரிக்க வானியல் கழகத்தின் என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை (1955)[5]
- அமெரிக்க்க் கலை, அறிவியல் கல்விக்கழக உறுப்பினர் (1958)[6]
இவரது பெயர் இடப்பட்டவை
- நிலாவின் மெரில் குழிப்பள்ளம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Obituary: Paul W. Merrill". Physics Today 14 (11): 90. November 1961. doi:10.1063/1.3057264. http://www.physicstoday.org/resource/1/phtoad/v14/i11/p90_s1?bypassSSO=1. பார்த்த நாள்: 2017-04-15.
- ↑ Merrill, Paul W. (1922). "Stellar spectra of class S". Astrophysical Journal 56: 457–82. doi:10.1086/142716. Bibcode: 1922ApJ....56..457M. http://articles.adsabs.harvard.edu//full/1922ApJ....56..457M/0000468.000.html.
- ↑ "Henry Draper Medal". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
- ↑ "Past Winners of the Catherine Wolfe Bruce Gold Medal". Astronomical Society of the Pacific. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
- ↑ "Grants, Prizes and Awards". American Astronomical Society. Archived from the original on 22 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Book of Members, 1780-2010: Chapter M" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 16 April 2011.
வெளி இணைப்புகள்
தொகு- Paul Willard Merrill — Biographical Memoirs of the National Academy of Sciences