பஹுவா நடனம்

அசாமின் சோனாவால் கச்சாரி இன மக்களின் ஒரு பாரம்பரிய விழா

பஹுவா நடனம் (அசாமியில்: বহুৱা নৃত্য) என்பது அசாமின் சோனாவால் கச்சாரி இன மக்களின் ஒரு பாரம்பரிய விழாவாகும் . மேலும் இந்த பஹுவா நடனம், சோன்வால் கச்சாரிகளின் கலை மற்றும் கலாச்சாரத்தின் வெளிப்பாடாகும். இந்த நிகழ்வை இந்த பழங்குடி மக்கள், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடுகிறார்கள். அசாமில் உள்ள திப்ருகார் மாவட்டத்தில் உள்ள பெரிய ஜமீரா பகுதியில் உள்ள தமால் கிராமத்தில் வசிக்கும் சோனாவால் கச்சாரிகளால் ஆடும் ஒரு பாரம்பரிய நடனமான இது எப்போது தொடங்கியது என்று உறுதிபட கூற இயலாது. ஆனால் இது அவர்களின் முன்னோர்கள் காலத்திலிருந்தே நடைமுறையில் இருப்பதாக அம்மக்கள் நம்புகிறார்கள்.

பஹுவா நடனம்
தோற்றம்அசாம், இந்தியா

நாட்டுப்புற நடன வடிவம்

தொகு

பஹுவா நடனம் பண்டைய தோற்றம் கொண்டது. இந்த நடனம் ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கத்தையும், தூய்மையான சமுதாயத்தையும், கெட்ட சகுனத்திலிருந்து விடுபடுவதையும் குறிக்கிறது. இந்த வழியில் பஹுவா நடனம் பல தலைமுறைகளாக நிகழ்த்தப்படுகிறது.

அசாமிய நாட்காட்டியின்படி, போஹக் மாதத்தில் (ஏப்ரல்-மே) இந்த பஹுவா நடனம் நிகழ்த்தப்படுகிறது. சோனாவல் கச்சாரிக்கள் போகாக் மாதத்தில் சாத் விழாவைக் கொண்டாடுகிறார்கள், அதைத் தொடர்ந்து அம்மாதத்தின் ஏழாவது நாளில் பஹுவா நடனம் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் நிகழ்த்தப்படுகிறது. பஹுவா நடன கொண்டாட்டத்திற்கு வெவ்வேறு புராணக் கதைகள் காரணமாக சொல்லப்பட்டுள்ளது. கதைகள் தலைமுறை தலைமுறையாக, நபருக்கு நபர் கடத்தப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளன; எனவே ஒரு குறிப்பிட்ட கதையை மட்டுமே வைத்து அதன் தோற்றத்தை உறுதிப்படுத்த முடியாது. இருப்பினும், வருடத்திற்கு ஒரு முறை நிகழ்த்தப்படும் நடனம் பழங்குடியினரை தூய்மைப்படுத்துவதாகவும், தீய சக்திகளை அகற்றுவதாகவும் பழங்குடி மக்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு கதையும் பல்வேறு வடிவங்களில் சித்தரிக்கப்பட்ட தீய ஆவியைச் சுற்றியே கட்டமைக்கப்படுகிறது, அவை இறுதியாக அவர்களின் கடவுளான க்ரிங் ராஜா பைதோ [1] (இந்து கதைகளின்படி சிவன்)வால் வெல்லப்படுகின்றன. வழக்கமாக இரண்டு அல்லது மூன்று ஆண்கள் 101 வாழை இலைகளை மெல்லிய கீற்றுகளாக வெட்டி ஆடை வடிவில் உடலைச் சுற்றிக் கட்டிக் கொள்வார்கள். பூசணிக்காய் அல்லது சுரைக்காயின் வெளிப்புற கூடுகளினால் செய்யப்பட்ட முகமூடிகளை இந்நடன கலைஞர்கள் அணிகிறார்கள், இது உள்ளூர் கலைஞரால் முறையாக வரையப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. முகமூடிகள் ராஜா மற்றும் ராணியைக் குறிக்கின்றன. இந்த முதன்மை நடன கலைஞர்களுடன், குழுவில் பலர் முற்றிலும் கருப்பு நிறத்தில் வரையப்பட்டு, வாழை இலையில் தயாரிக்கப்பட்ட பாவாடைகளை அணிந்து, பேய்கள் அல்லது தீமைகள் என்று அழைக்கப்பட்டு நடன நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கின்றனர். முன்பெல்லாம் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களா என்பதில் தெளிவான குறிப்புக்கள் இல்லை.

காட்டில் இருந்து நடனக் கலைஞர்களும், மிருதங்கம், தோல், மேளதாளங்கள் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளை இசைக்கும் இசைக்கலைஞர்களின் எழுச்சியுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. உள்ளூர் மக்களும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியைக் காணவும், சுபக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவும் களத்தில் திரளாக கூடுகின்றனர். நடனத்தின் முடிவில், கொண்டாட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சடங்கின் ஒரு பகுதியாக, பஹுவா நடன கலைஞர்களுடன் அருகிலுள்ள குளம் அல்லது ஆற்றுக்கு நடந்து செல்கிறார்கள். தண்ணீரில் குளித்துவிட்டு வாழை இலையால் ஆன உடையை அங்கேயே கொட்டுவார்கள். இந்த செயல் கிராமத்திலிருந்தும் பழங்குடி மக்களின் வாழ்க்கையிலிருந்தும் துரதிர்ஷ்டங்களையும் தீயவர்களையும் கழுவுவதைக் குறிக்கிறது. சடங்கின்படி ஆற்றில் இருந்து கிராமத்திற்குத் திரும்பும் போது பஹுவா கலைஞர்கள் தங்கள் சென்ற வழியைத் திரும்பிப் பார்க்கக்கூடாது. தீய சக்திகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்கும் என்று அவர்கள் நம்பும் வழியில் பெர்ரி மரங்கள் மற்றும் இலைகளின் முட்களையும் இலைகளையும் விட்டுவிட்டு, அது தீய சக்திகள் கிராமத்திற்குள் நுழைவதைத் தடுக்கிறது, இதனால் முழு கிராமமும் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் இருக்க உதவுகிறது. சோனோவால் கச்சாரிக்கள் மகிழ்ச்சியாக சமைத்து சாப்பிடுவதன் மூலம் கொண்டாட்டத்தை முடிவுக்கு கொண்டுவருகிறார்கள். கொண்டாட்டம் மற்றும் சடங்கின் தொடக்கத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கண்டுபிடிக்க முடியாது என்றாலும், பெரியவர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுப்படி இது காமதாபூர் இராச்சியத்தையும் மேல் அசாம் பகுதியையும் மன்னர்கள் ஆண்ட காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறதையும் அறியலாம் [2]

 
பேய்கள் அல்லது தீமைகளை சித்தரிக்கும் பஹுவாக்கள், வாழை இலையால் செய்யப்பட்ட உடைகளை அணிந்தவர்கள் மற்றும் உடன் கலைஞர்கள் (கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு வாழை இலையால் செய்யப்பட்ட பாவாடை அணிந்துள்ளனர்

மேற்கோள்கள்

தொகு
  1. "கிரிங் ராஜா பைத்தோவின் பஹுவா நடன வழிபாடு".
  2. "பஹுவா நடனம்".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஹுவா_நடனம்&oldid=3663534" இலிருந்து மீள்விக்கப்பட்டது