பாகமதி

ஜி. அசோக் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் 2018 இல் வெளியான திரைப்படம்

பாகமதி (Bhaagamathie) ஜி. அசோக் இயக்கத்தில், வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் ஆகியோரின் தயாரிப்பில், அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் தமிழ், தெலுங்கு இருமொழி திகில் திரைப்படம்.[1][2] இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 206ஆம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2018 இல் திரையரங்குகளில் வெளியானது. ஒரு அரசியல்வாதியின் ஊழலைக் கண்டறிவதின் பொருட்டு, பேய் இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் ஒரு பெண்ணைச்சுற்றி நிகழும் கதையே பாகமதி.[3][4]

பாகமதி
இயக்கம்ஜி. அசோக்
தயாரிப்புவி. வம்சி கிருஷ்ணா ரெட்டி
பிரமோத்
கதைஜி. அசோக்
இசைதமன்
நடிப்புஅனுஷ்கா
உன்னி முகுந்தன்
ஜெயராம்
ஆஷா சரத்
ஒளிப்பதிவுஆர். மதி
படத்தொகுப்புகோட்டகிரி வெங்கடேசுவர ராவ்
கலையகம்யுவி கிரியேசன்ஸ்
வெளியீடுசனவரி 26, 2018 (2018-01-26)
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
தமிழ்

நடிப்புதொகு

கதைதொகு

நாட்டுக்காக நல்லது செய்யும் அமைச்சர் ஒருவரை கடவுளர் சிலைகள் கடத்தல் வழக்கில் சிக்க வைக்கத் திட்டமிடுகிறது அரசு.[5] அமைச்சரின் தனிச் செயலாளரான இந்திய ஆட்சிப்பணி அலுவலர் அனுஷ்காவை பாகமதி என்னும் பேய் வீட்டில் சிறையிலடைத்து புலனாய்வு நடத்துகின்றனர்.[6] தொடர்ந்து கொள்ளை போன கடவுள் சிலைகள் கிடைத்ததா? அரசு- அரசியல் சதுரங்கத்தில் அனுஷ்கா என்ன செய்கின்றார்? பாகமதி என்பவர் யார்? என்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கின்றது பாகமதி திரைப்படம்.[7]

சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகமதி&oldid=3220193" இருந்து மீள்விக்கப்பட்டது