பாகவதம் (வடமொழி நூல்கள்)
வைணவ இலக்கியங்களாகப் பாகவதக் கதை எழுதப்பட்ட வடமொழி நூல்கள் ஏழு உள்ளன. அவற்றில் பகவத் துதிகள் உள்ளன. இவற்றில் முதல் இரண்டு பாகவதங்களை இயற்றியவர் வியாசர். பிறவற்றை இயற்றியவர்களின் பெயர்கள் தெரியவில்லை. அவற்றைப்பற்றி அறிய உதவும் அட்டவணை:
அட்டவணை
தொகுஎண் | பெயர் | சொன்னவர் | கேட்டவர் | பொருள் | பயன் | சுலோகம் (ஆயிரம்) |
---|---|---|---|---|---|---|
1 | இதிகாச பாகவதம் | சுகமுனி | பரீச்சித்து | 4 அவதாரம் மட்டும் | ஞானம் | 18 |
2 | மகா பாகவதம் என்னும் புராண பாகவதம் | நாரதர் | ருக்குமணி | 6 அவதாரம், (10 அவதாரம் அடக்கம்) | பாவ நீக்கம் | 30 |
3 | சம்மிதா பாகவதம் | வைசம்பாயனர் | சனமேசயன் | 20 அவதாரம், 22 வைராக்கிய ரசம் | பக்தி | 50 |
4 | உப சம்மிதா பாகவதம் | அகத்தியர் | சுதர்சனன் | பாகவதர் வரலாறு, 32 அவதாரம் | ரோக நீக்கம் | 70 |
5 | விஷ்ணு ரகசிய பாகவதம் | ஆரீதர் | காசிபர் | 100 பாகவதர் வரலாறு, 25 அவதாரம் | இஷ்ட சித்தி | 100 |
6 | விஷ்ணு யாமன பாகவதம் | பராசரர் | மைத்திரேயர் | தருக்கம், விசித்துர வித்தை, மந்திர நூல் | பக்தி | 80 |
7 | கௌதம சம்மிதா பாகவதம் | கௌதமர் | கௌசிகர் | வீடுபேறு தரும் கிருட்டிணன் வரலாறு | வீடுபேறு | 10 |
இவற்றையும் காண்க
தொகுகருவிநூல்
தொகுமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005