பாகா அருங்காட்சியகம்
பாகா அருங்காட்சியகம் ( Bagha Museum ) வங்காளதேசத்தின் ராச்சாகி மாவட்டம் பாகா உபசீலாவில் உள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும். 2012 ஆம் ஆண்டு சூலை மாதம் இது நிறுவப்பட்டது. 2015 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதியன்று பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டது. [2] [3]
বাঘা জাদুঘর | |
நிறுவப்பட்டது | மே 7, 2015[1] |
---|---|
அமைவிடம் | பாகா, ராச்சாகி, வங்காளதேசம் |
ஆள்கூற்று | 24°11′53″N 88°50′24″E / 24.19811°N 88.83992°E |
உரிமையாளர் | வங்கதேச அரசு |
கட்டிட விவரங்கள் | |
பொதுவான தகவல்கள் | |
கட்டுமான ஆரம்பம் | சூன் 2011 |
நிறைவுற்றது | சுலை 2012 |
செலவு | 62,00,000 டாக்காக்கள் |
வரலாறு
தொகுபாகா அருங்காட்சியகம் வங்கதேச தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டே கட்டுமானம் நிறைவடைந்தாலும் அருங்காட்சியகம் 7 மே 2015 அன்றுதான் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. [1]
அட்டவணை
தொகுகோடையில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். பகல் நடுவில் பகல் 1 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அரை மணி நேரம் உணவு இடைவேளைக்காக மூடப்படுகிறது. குளிர்காலத்தில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். சூம்மா தொழுகைக்காக வெள்ளிக்கிழமை நாட்களில் 12:30 முதல் 3:30 வரை மூடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறையாகவும் திங்கள் கிழமைகளில் 2:00 மணி முதல் திறந்திருக்கும். சிறப்பு அரசாங்க நாட்களிலும் அருங்காட்சியகம் திறந்திருக்கும். [2]
அனுமதிச்சீட்டு
தொகுஅருங்காட்சியகத்தின் வாயிலுக்கு அருகில் ஒரு விற்பனையகம் உள்ளது. அனுமதிச்சீட்டு ஒரு நபருக்கு 15 ரூபாய் என விற்கப்படுகிறது. இருப்பினும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதிச்சீட்டு தேவையில்லை. உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான நுழைவுக் கட்டணம் 5 ரூபாய்களாகும். சார்க் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு 50 டாக்காக்களும் மற்ற வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு 200 டாக்காக்களும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
படக்காட்சியகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn). The Daily Ittefaq. 6 May 2015 இம் மூலத்தில் இருந்து 2021-06-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210628134712/https://archive1.ittefaq.com.bd/print-edition/others/2015/05/06/47205.html.
- ↑ 2.0 2.1 "Bagha Museum". bagha.rajshahi.gov.bd. Archived from the original on 24 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Museums". archaeology.portal.gov.bd. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.