பாகுபாடுகள் ஒழிப்பு நாள்
பாகுபாடுகள் ஒழிப்பு நாள் (Zero Discrimination Day) என்பது ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். உலக நாடுகளில் சட்டத்திலும், நடைமுறையிலும் மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறைகூவல் விடுக்கும் நாளாக இது உள்ளது. இந்த நாள் 2014 மார்ச் 1 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இதை பெய்ஜிங்கில் ஒரு முக்கிய நிகழ்வுடன் அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஐநா எய்ட்ஸ் விழிப்புணர்வு/கட்டுப்பாடு அமைப்பின் (யுனெய்ட்ஸ்) நிறைவேற்று இயக்குனரான மைக்கேல் சிடிப் என்பவரால் தொடங்கப்பட்டது.[1]
2017 ஆண்டுக்கான பிரகடனத்தில், “பாகுபாடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்புவோம்” என்ற கருப்பொருள் யுனெய்ட்சால் மையப்படுத்தப்பட்டிருந்தது.[2] 2018 ஆண்டுக்கான கருப்பொருள் அறிவிக்கப்படவில்லை. மாறாக, கேள்விகளில் கோடிட்ட இடங்களே கொடுக்கப்பட்டிருந்தன. “உங்களுக்கு …….வர், ……. ஆக இருந்தால் என்ன, அதற்காக அவரை ஒதுக்குவீர்களா” என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.[3]
தொடக்கத்தில், எய்ட்ஸ் / எச்ஐவி பாதிப்புள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கும் அவர்களின் திறன் வெளிப்பாட்டு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கும் முடிவுகட்டும் இயக்கங்கள், நடவடிக்கைகள் ஆகியவைதான் இந்த நாளின் இலக்குகளாக யுனெய்ட்சால் அறிவிக்கப்பட்டிருந்தன.[4] தற்போது, எல்லா வகையிலும் உலக மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உந்தும் நாளாகவும் இது முன்வைக்கப்படுகிறது.
இந்தியாவில் பரப்புரையாளர்கள், பாகுபாடு காண்பிக்கும் சட்டங்களுக்கு எதிராக பேசுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டம், 377 ஆவது பிரிவு, ஓரினச்சேர்க்கையை குற்றம் என்கிறது.[5]
2015 ஆம் ஆண்டில், கலிஃபோர்னியாவில் உள்ள ஆர்மீனிய அமெரிக்கர்கள், இந்த நாளன்று, ஆர்மீனிய இனப்படுகொலைகளை நினைவு கூர்ந்தனர்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Zero Discrimination Day to be celebrated 1 March 2014 | UNAIDS". பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.
- ↑ "UNAIDS urges everyone to make some noise for zero discrimination | UNAIDS". பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.
- ↑ அ. குமரேசன் (1 மார்ச் 2018). "பாகுபாடுகளை ஒழிப்பதில் உண்மையாகவே அக்கறை காட்டப்படுகிறதா?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Writer, Solomon Watkins, Contributing. "FrontPageAfrica Newspaper - Liberia Joins Global Community to Stand Up For Zero Discrimination" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2017-10-09. பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Zero Discrimination Day: Heres why you should know about it and be a part". http://indiatoday.intoday.in/story/zero-discrimination-day-lgbt-feminism-rape-racism-hiv-aids/1/609022.html.
- ↑ Hairenik (2015-03-02). "Armenian Youth Stage 'Die-in' on 'Zero Discrimination Day'". பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.