பாக்கர்வால் நாய் (Bakharwal Dog) என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாதுகாவல் நாய் ஆகும். இந்த நாய் பல நூற்றாண்டுகளாக நாடோடி இனமக்களான குச்சார் மக்களால் தங்கள் கால்நடைகளை காக்கும் பணிக்கு வளர்க்கப்பட்டு வருகிறது. ஒரு அண்மைய ஆய்வு இந்த இன நாயகள் அழிவின் விளிம்பில் உள்ளது என்று கூறுகிறது.[1]
பாக்கர்வால் நாய்
பிற பெயர்கள்
|
Bakerwali Shepherd Dog
|
தோன்றிய நாடு
|
இந்தியா
|
|
பாகுபாடும் தரநிர்ணயமும்
|
Not recognized by any major kennel club
|
|
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)
|
இந்த இன நாய் திபெத்திய மஸ்தீஃப் நாய் மற்றும் செந்நாய் ஆகியவற்றின் கலப்பினால் உருவானதாகும். இதன காதுகள், கழுத்து, முதுகு மற்றும் வால் ஆகியவை மிகுதியான முடிகள் கொண்டவையாக உள்ளன, மேலும் இவை குளிர்ந்த தட்பவெப்பநிலையை விரும்புகிறன.