பாக்கித்தானில் வாழ்க்கைத் தரம்

பாக்கித்தானில் வாழ்க்கைத் தரம் (Standard of living in Pakistan) சமூகத்தின் வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையில் வேறுபடுகிறது மற்றும் மாறுபடுகிறது. பாக்கித்தான் பெருமளவில் ஒரு வளரும் நாடாகக் கருதப்படுகிறது. மனித வளர்ச்சிக் குறியீட்டின் படி பாக்கித்தான் மொத்தமுள்ள 170 நாடுகளில் 147 ஆவது இடத்தில் உள்ளது. இந்த இடமதிப்பு குறைந்த தரம் கொண்ட மனித வளர்ச்சியின் மேல் பக்கமாகும்.[1]

70 மில்லியனுக்கும் அதிகமான நடுத்தர மக்கள் வர்க்கத்தை கொண்டிருந்தாலும், நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் ஏழைகளாகவே உள்ளனர்.[2] வறுமை, வேலையின்மை மற்றும் மக்கள்தொகை ஏற்றம் ஆகியவை பாக்கித்தானின் தற்போதைய சமூக பிரச்சனைகளுக்கு பங்களிக்கின்றன. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்த மக்கள்தொகையில் 17% மக்களுக்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.[3] வேலையின்மை விகிதம், 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி 15% ஆக இருந்தது.[4] மோசமான நிர்வாகம், அரசியல் பாதுகாப்பின்மை மற்றும் மத துன்புறுத்தல் ஆகியவை சராசரி பாக்கித்தானிய குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மேலும் கூட்டியுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. United Nations Development Programme, Statistics of the Human Development Report, Human Development Reports
  2. "The News International: Latest News Breaking, Pakistan News". Archived from the original on 2010-08-12. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
  3. "Archived copy". Archived from the original on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "Pakistan Unemployment rate - Economy".

புற இணைப்புகள்

தொகு