பாக்கித்தான் அறிவியல் மன்றம்
பாக்கித்தான் அறிவியல் மன்றம் (Pakistan Science Club , உருது: پاکستان سائنس کلب). நாட்டின் இளைய தலைமுறையினர் மத்தியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை ஊக்குவிக்கும் நோக்கில், பல்வேறு விஞ்ஞான நடவடிக்கைகளில் மாணவர்களை பங்கு பெறச்செய்யும் ஒரு பாக்கித்தான் இளைஞர் அமைப்பு ஆகும்[1]
பாக்கித்தான் அறிவியல் மன்றம் Pakistan Science club | |
---|---|
சுருக்கம் | பா.அ.ம |
வகை | அறிவியல் |
Purpose/focus | அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை ஊக்குவித்தல் |
தலைமையகம் | கராச்சி |
தலைவர் | அப்துல் இரவுஃப் |
வலைத்தளம் | http://www.paksc.org |
சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் இம்மன்றம் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அறிவியல் நடவடிக்கைகளை நடத்துகிறது. மிகச்சமீபத்தில் இம்மன்றம் கோடைக்கால சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்திருந்தது[2]. மேலும் இதே போல கராச்சி வானியல் கழகம் போன்ற பிற அறிவியல் அமைப்புகளுடன் இணைந்தும் சமீபத்தில் நிகழ்ச்சிகளை நடத்தியது[3][4]. உலக சமாதானம் மற்றும் மேம்பாட்டிற்காகக் கொண்டாடப்படும் உலக விஞ்ஞான தினம் போன்ற அனைத்துலக அறிவியல் நிகழ்ச்சிகளிலும் பாக்கித்தான் அறிவியல் மன்றம் பங்கேற்றது[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Dark Age of Muslim World". 10 February 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ APP (3 July 2013). "'Science and Technology Exploration Camp' concludes in Islamabad".
- ↑ "Engaging children: Science is in the air - The Express Tribune". 30 May 2015.
- ↑ "Young scientists; Two students to compete at international level - The Express Tribune". 31 January 2015.
- ↑ "AN ONLINE LECTURE ON ACCOUNT OF WORLD SCIENCE DAY FOR PEACE AND DEVELOPMENT". Dr. Attaur Rahman.