பாங்கரா (நடனம்)

பாங்கரா நடனம்(பஞ்சாபி: ਭੰਗੜਾ, ஆங்கிலம்:Bhangra) என்பது இந்தியா மற்றும் பாக்கித்தான் நாடுகளின் பஞ்சாப் பகுதி பெண்கள் ஆடுகின்ற ஒரு பிரபலமான நாட்டுப்புற நடனம் ஆகும்.இது பஞ்சாப் பிராந்தியத்தில் உள்ள மாஜ்ஹா எனும் ஊரில் தோன்றிய பாரம்பரிய நடனம் ஆகும்.[1]

பாங்கரா நடனம்

வகைகள்

தொகு

பாரம்பரிய பாங்கரா

தொகு
 
பஞ்சாபி பாங்கரா கலைஞர்

பாரம்பரிய பாங்கரா தோற்றங்கள் தொடர்பாக பல ஊகங்கள் உள்ளன. தில்லான் கூற்றுப்படி பாங்கரா நடனம் மற்றொரு பஞ்சாபி தற்காப்பு நடனமான பாகா நடனத்தை ஒத்து உள்ளது.[2]

மாஜ்ஹாவில் தோன்றிய பாங்கரா நடனம் இந்தியாவின் குர்தாஸ்பூர் மற்றும் பாக்கித்தான் பகுதியில் சியால்கோட், சேக்பூர், குஜ்ரன்வல்லா ஆகிய பகுதி பெண்களால் நடனமாடப்படுகிறது.[3][4][5]

சியால்கோட் மாவட்ட கிராமங்களில் பாங்கரா பாரம்பரிய வடிவம் கொண்டதாக கருதப்படுகிறது.[6]

எளிய வடிவ பாரம்பரிய பாங்கரா

தொகு
 
2012 இல் அமிர்தசரஸ் பகுதியில் நடந்த பாங்க்ரா நடனம்

பாங்கரா நடனம் 1947 க்கு முன்பு ஒருங்கிணைந்த பஞ்சாப் பிராந்திய மக்களின் ஒரு நடன வகையாக இருந்தது. இந்திய பாக்கித்தான் பிரிவினைக்குப் பின் பல இலட்சம் மக்கள் பாக்கித்தானின் பஞ்சாபுப் பகுதியிலிருந்து இந்திய பஞ்சாபுப் பகுதிக்கு புலம் பெயர்ந்தனர். அதிகமான பாங்கரா நடனக் கலைஞர்கள் பாக்கித்தானில் தங்கி விட்டனர். எனவே இந்திய பஞ்சாபுப் பகுதியில் எளிய வடிவ பாங்கரா தோன்றியது.

பாட்டியாலா மகாராசாவின் ஆதரவைப் பெற்று இந்திய பஞ்சாபில் எளிய வடிவ பாரம்பரிய பாங்கரா வளர்ச்சி அடைந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Encyclopedia Britannica
  2. Folk Dances of Panjab Iqbal S Dhillon National Book Shop 1998
  3. Folk Dances of Panjab Iqbal S Dhillon National Book Shop 1998
  4. Tony Ballantyne Between Colonialism and Diaspora: Sikh Cultural Formations in an Imperial World [1]
  5. Khushwant Singh (2006) Land of Five Rivers
  6. Tony Ballantyne (2007) Textures of the Sikh Past: New Historical Perspectives [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கரா_(நடனம்)&oldid=2901011" இலிருந்து மீள்விக்கப்பட்டது