பாங்குர்சுட்டு மையம்

பாங்குர்சுட்டு மையம் (The Pankhurst Centre), 60–62 நெல்சன் தெரு, மான்செசுட்டர், என்பது விக்டோரிய குடியிருப்புத் தொகுதியாகும். இதில் 62 ஆம் எண் வீட்டில் எம்மாலின் பாங்குர்சுட்டும் அவரது மக்களாகிய சில்வியாவும் கிறித்தபெல்லும் அடேலாவும் வாழ்ந்தனர்.[1] இங்கு தான் பெண் வாக்குரிமைப் போராட்டம் 1903 இல் தோன்றியது.[2]

பாங்குர்சுட்டு மையம்
பாங்குர்சுட்டு மையச் சுவரில் அமைந்த நீலவண்ண பட்டயம்
பாங்குர்சுட்டு மையம், மான்செசுட்டர் அரசு தகவல் மகிழுந்து பூங்காவில் இருந்தான காட்சி

விவரிப்பு தொகு

பாங்குர்சுட்டு மையம் இப்போது மகளிர் மட்டும் புழங்கும் வெளியாக மாறியுள்ளது, இங்கு பெண்கள் குழுமிப் படிக்கின்றனர்; பணிபுரிகின்றனர். இது 1974 ஜூன் 14 இல் முதல் தரக் கட்டிடமாக குறிப்பிடப்பட்டது.[3]

இந்த மையத்தில், பாங்குர்சுட்டு மாளிகை எனும் வாக்குரிமைப் போராட்ட இயக்கத்துக்கான நினைவு அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இதில் உள்ல எடுவார்டியப் பாணி உள்ளிருப்புகள் பாங்குர்சுட்டையும் அவரது மக்களையும் நினைவூட்டுகிறது. இந்த மாளிகை பாங்குர்சுட்டு மையத்தின் அழகு பொலிந்த முதல் அறையாகும். இதை பார்பாரா காசிலும் எலன் பாங்குர்சுட்டும் 1987 அக்தோபர் 10 இல் திறந்துவைத்தபோது இந்த கலைநய மிக்க அறை அனைவரையும் கவர்ந்தது.

மகளிர் சமூக, அரசியல் ஒன்றியம் 1903 இல் இந்த எம்மலின் பாங்குர்சுட்டு மாளிகை வீட்டில் நிறுவப்பட்டது.

பாங்குர்சுட்டு மையம் தன்னார்வலரால் நடத்தப்படுகிறது. பொதுநிதி ஏதும் இதற்காகத் திரட்டப்படுவதில்லை. இது கொடைகளால் மட்டுமே இயங்குகிறது.

வரலாறு தொகு

1903 இல் எம்மலின் பாங்குர்சுட்டு மகளிர் சமூக, அரசியல் ஒன்றியத்தை 62 நெல்சன் தெருவில் நிறுவியபோது இது அவரது வாழ்விடமாக இருந்தது.[3] தன் கணவர் இரிச்சர்டு பாங்குர்சுட்டு 1898 இல் இறந்ததும், எம்மலின் இந்த வீட்டிற்கு வாழ வந்துள்ளார்.

பாங்குர்சுட்டு மையத் தோட்டம் தொகு

சுட்டாக் சார்ந்த தோட்ட வடிவமைப்பாளரான ஜேனட் இலெய்கு 2018 இல் புதிய தோட்டத்தைப் பாங்குர்சுட்டு மையத்தில் வடிவமைத்தார், அது 2018 செப்டம்பரில் திறந்துவைக்கப்பட்டது. இது மகளிர் வாக்குரிமை நூற்றாண்டு நினைவுக்காகவும் இப்போராட்டப் போராளிகளை நினைவுகூரவும் ஏற்படுத்தப்பாட்டது. இந்த்த் தோட்டத்துக்காக 500 க்கும் மேற்பட்டோர் 2017 இல் அளித்த 24,000 பவுண்டு நிதிக்கொடைவழி நிறுவப்பட்டது. இத்தோட்டம் மான்செசுட்டர் மகளிர் நல்கைவழி உருவாக்கிய பெண்களும் குழந்தைகளும் ஓய்வெடுப்பதற்காண வெளியையும் கொண்டுள்ளது.[4]

 
பாங்குர்சுட்டு மையம், உட்பகுதி

மேலும் காண்க தொகு

  • பெண் வாக்குரிமை இயக்கச் சின்னங்களும் நினைவிடங்களும்

மேற்கோள்கள் தொகு

  1. Hartwell 2001, p 320
  2. Anon. "The Pankhurst Centre". The Pankhurst Centre. Archived from the original on 3 செப்டம்பர் 2004. பார்க்கப்பட்ட நாள் 8 February 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "The Pankhurst Centre 62, Manchester". British Listed Buildings.
  4. "Hundreds of supporters bring Pankhurst Garden to life". Visit Manchester (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.

மேலும் படிக்க தொகு

  • Hartwell, Clare (2001), Manchester, Pevsner Architectural Guides, London: Penguin, ISBN 0-14-071131-7
 
பாங்குர்சுட்டு மையத் தோட்டம் திறப்பு, செப்டம்பர் 2018

வெளி இணைப்புகள் தொகு

 
அமர் இருக்கை, பாங்குர்சுட்டு மையத் தோட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்குர்சுட்டு_மையம்&oldid=3589677" இலிருந்து மீள்விக்கப்பட்டது