பாசிக்குடா

பாசிக்குடா (Pasikudah) என்பது மட்டக்களப்பிலிருந்து 35 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோர பிரதேசமாகும். வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட இவ்விடம் இலங்கையின் மிகவும் அழகான கடற்கரைகளுள் ஒன்று ஆகும். புகழ்பெற்ற உல்லாச பயணிகளைக் கவரும் இடமாக இருந்த இது ஈழப் போர் இடம் பெற்றதனால் இதன் உல்லாச பயணிகளை இழந்தது. 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மேலும் நிலைமையை மோசமாக்கியது. ஈழப் போர் முடிவுற்றதும் இப்பகுதி உல்லாச பயணிகளை உள்வாங்கும் இடமாக மாறி வருகின்றது.

பாசிக்குடா
பாசிக்குடா கடற்கரை
பாசிக்குடா கடற்கரை
நாடுஇலங்கை
மாகாணங்கள்கிழக்கு மாகாணம்
மாவட்டங்கள்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகோறளைப்பற்று வாழைச்சேனை
தென்னந்தோப்பு - பாசிக்குடா

அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, முருகைக்கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும், கிடுகுகளால் அழகுற,நேர்த்தியாக வேயப்பட்ட “கபாணா” என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும், பாசிக்குடாவின் சிறப்புக்களாகும்.[1][2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிக்குடா&oldid=3220269" இருந்து மீள்விக்கப்பட்டது