பாசுபரோகுளோரிடேட்டு
வேதிச் சேர்மம்
பாசுபரோகுளோரிடேட்டு (Phosphorochloridate) என்பது வேதியியலில் (RO)2P(O)Cl என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமபாசுபரசு சேர்மங்களைக் குறிக்கிறது . வாய்ப்பாட்டிலுள்ள R ஒரு கரிம பதிலியாக இருக்கும். இவை வழக்கமான பாசுபேட்டுகளைப் போல (OP(OR)3) நான்முகி வடிவத்தில் காணப்படுகின்றன. பொதுவாக இவை நிறமற்றும் நீராற்பகுத்தல் உணரிகளாகவும் உள்ளன. இவை பாசுபரோகுளோரிடைட்டுகளின் (RO)2PCl) ஆக்சிசனேற்ற வழிப்பெறுதிகளாகும். ஈரெத்தில் பாசுபரோகுளோரிடேட்டு இதற்கு பிரபலமான ஓர் எடுத்துக்காட்டாகும்.
வினைகள்
தொகுபாசுபேட்டு எசுத்தர்கள் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மங்களாக பாசுபரோகுளோரிடேட்டுகள் கருதப்படுகின்றன :[1]
- (RO)2P(O)Cl + R'OH → (R'O)(RO)2P(O) + HCl
அசைடு போன்ற மற்ற மின்னணு மிகுபொருள்களும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ D. C. Muchmore (1972). "Preparation and Reductive Cleavage of Enol Phosphates: 5-Methylcoprost-3-ene". Org. Synth. 52: 109. doi:10.15227/orgsyn.052.0109.
- ↑ Shioiri, Takayuki; Yamada, Shun-ichi (1984). "Diphenyl Phosphorazidate". Org. Synth. 62: 187. doi:10.15227/orgsyn.062.0187. https://archive.org/details/sim_organic-syntheses_1984_62/page/187.