டையெத்தில் குளோரோபாசுபேட்டு

டையெத்தில் குளோரோபாசுபேட்டு (Diethyl chlorophosphate) என்பது C4H10ClO3P என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமத் தொகுப்பு வினைகளில் இதை ஒரு வினைப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ஆல்ககால்களை அவற்றுடன் தொடர்புடைய டையெத்தில்பாசுபேட்டு எசுத்தர்களாக மாற்றுவதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. தெளிவான நீர்மமான டையெத்தில் குளோரோபாசுபேட்டு பழச்சுவை மணத்துடன் காணப்படுகிறது. மேலும், நிறமற்ற நிலையிலிருந்து இளமஞ்சள் நிறம் வரைக்கும் நிறம் கொண்டதாகவும் உள்ளது. அரிப்புத் தன்மையுடன் உயர் நச்சுத்தன்மையும் கொண்டதாக உள்ளது. காலின்சிடீயரேசு சிதைவை தடுக்கும் தடுப்பியாகவும் இது செயல்படுகிறது[1].

டையெத்தில் குளோரோபாசுபேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-[குளோரோ(ஈதாக்சி)பாசுபோரைல்]ஆக்சியீத்தேன்
வேறு பெயர்கள்
டையீத்தைல்குளோரோபாசுபேட்டு; டையீத்தாக்சிபாசுபரசு ஆக்சிகுளோரைடு; டையீத்தைல் குளோரோபாசுபோனேட்டு; டையீத்தைல் பாசுபோரோகுளோரைடு; டையீத்தாக்சைடுபாசுபோரைல் குளோரைடு; O,O-டையீத்தைல் குளோரோபாசுபேட்டு
இனங்காட்டிகள்
814-49-3
ChemSpider 12587
InChI
  • InChI=1S/C4H10ClO3P/c1-3-7-9(5,6)8-4-2/h3-4H2,1-2H3
    Key: LGTLXDJOAJDFLR-UHFFFAOYSA-N
  • InChI=1/C4H10ClO3P/c1-3-7-9(5,6)8-4-2/h3-4H2,1-2H3
    Key: LGTLXDJOAJDFLR-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13139
SMILES
  • CCOP(=O)(OCC)Cl
பண்புகள்
C4H10ClO3P
வாய்ப்பாட்டு எடை 172.54 கிராம்/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. "Haz-Map Category Details". hazmap.nlm.nih.gov. Archived from the original on 2019-06-24. பார்க்கப்பட்ட நாள் 2016-07-30.

புற இணைப்புகள் தொகு