பாசுபரோகுளோரிடைட்டு

வேதிச் சேர்மங்களின் ஒரு வகை

பாசுபரோகுளோரிடைட்டுகள் (Phosphorochloridites) என்பவை (RO)2PCl என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமபாசுபரசு சேர்மங்களைக் குறிக்கும். வாய்ப்பாட்டிலுள்ள R என்பது பதிலீடு செய்யப்படும் கரிம பதிலியைக் குறிக்கும். வழக்கமான பாசுபைட்டுகள் (P(OR)3) போல இவை பிரமிடு எனப்படும் பட்டைக்கூம்புரு வடிவத்தில் உள்ளன. வழக்கம் போல நிறமற்றவையாகவும் நீராற்பகுப்புக்கு உணர்திறன் கொண்டவையாகவும் உள்ளன. ஆக்சிசனேற்றம் மூலமாக இவை தொடர்புடைய பாசுபரோகுளோரிடேட்டுகளைக் ((RO)2P(O)Cl) கொடுக்கின்றன.

தயாரிப்பு

தொகு
 
2,2'-பைபீனைலீன் பாசுபரோகுளோரிடைட்டு சேர்மத்தின் கட்டமைப்பு

பாசுபரசு முக்குளோரைடு சேர்மத்தை பகுதியளவு ஆல்ககால் பகுப்புக்கு உட்படுத்தினால் பாசுபரோகுளோரிடைட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வினை படிப்படியாக நிகழ்கிறது:[1]

PCl3 + ROH → HCl + (RO)PCl2 (பாசுபோகுளோரிடைட்டு)
(RO)PCl2 + ROH → HCl + (RO)2PCl (பாசுபோடைகுளோரிடைட்டு)
(RO)2PCl + ROH → HCl + (RO)3P (பாசுபைட்டு)

இந்த வினைகள் பைநாப்தால் மற்றும் 2,2'-பைபீனால் போன்ற அரோமாட்டிக் டையால்களால் எளிதில் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பாசுபரோகுளோரிடைட்டுகள் டைபாசுபைட்டு ஈந்தணைவிகள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மங்களாகும். Rh(acac)(CO)2 போன்ற ரோடியம் முன்னோடிகளுடன் இணைந்து இந்த டைபாசுபைட்டு ஈந்தணைவிகள் ஆல்க்கீன்களின்[2] ஐதரோபார்மைலேற்றத்திற்குத் தேவையான தொழில்துறை ரீதியாகப் பயன்படுத்தப்படும் வினையூக்கிகளை வழங்குகின்றன.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. Gual, Aitor; Godard, Cyril; de la Fuente, Verónica; Castillón, Sergio (2012). "Design and Synthesis of Phosphite Ligands for Homogeneous Catalysis". Phosphorus(III) Ligands in Homogeneous Catalysis: Design and Synthesis. pp. 81–131. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9781118299715.ch3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118299715.
  2. Billig, Ernst; Abatjoglou, Anthony G.; Bryant, David R. (1988). "Homogeneous Rhodium Carbonyl Compound-Phosphite Ligand Catalysts and Process for Olefin Hydroformylation". US 4769498 a 19880906 to Union Carbide. 
  3. Cuny, Gregory D.; Buchwald, Stephen L. (1993). "Practical, High-Yield, Regioselective, Rhodium-Catalyzed Hydroformylation of Functionalized α-olefins". Journal of the American Chemical Society 115 (5): 2066–2068. doi:10.1021/ja00058a079. 
  4. Van Rooy, Annemiek; Kamer, Paul C. J.; Van Leeuwen, Piet W. N. M.; Goubitz, Kees; Fraanje, Jan; Veldman, Nora; Spek, Anthony L. (1996). "Bulky Diphosphite-Modified Rhodium Catalysts: Hydroformylation and Characterization". Organometallics 15 (2): 835–847. doi:10.1021/OM950549K. http://dare.uva.nl/personal/pure/en/publications/bulky-diphosphite-modified-rhodium-catalyst-hydroformylation-and-characterization(c06c2654-cecb-4e97-84ba-f1fdfb51ad35).html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபரோகுளோரிடைட்டு&oldid=4148201" இலிருந்து மீள்விக்கப்பட்டது