பாசுபேட்டு குறைநிரப்பி

பாசுபேட்டு குறைநிரப்பி (Phosphate supplement) இரத்த பாசுபேட்டு குறைவு நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

பாசுபேட்டு சுழற்சியை விட்டு வெளியேறி செல்களுக்குள் நுழையும் போது பெரும்பாலான இரத்த பாசுபேட்டு குறைவு நோய் ஏற்படுகிறது. அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மற்றும் நீண்டகால ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு பாசுபேட்டு சத்து கூடுதலாகத் தேவைப்படுகிறது.[1]

சோடியம் பாசுபேட்டு, பொட்டாசியம் பாசுபேட்டு சேர்மங்கள் நரம்பு வழியாக அல்லது வாய்வழியாகக் கொடுக்கப்பட்டு சிகிச்சையை நிர்வகிக்கலாம். மாத்திரை வடிவத்தில் இவை இரண்டும் இணைந்த மாத்திரைகளும் கிடைக்கின்றன.[2]

பாசுபேட்டு முதன்மையாக சிறுநீரில், சேய்மை சிறுநீரகக் குழலில் வெளியேற்றப்படுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Principles and Practice of Surgery (7 ). Elsevier. 2018. பக். 3–28. https://archive.org/details/principlespracti0007unse. 
  2. "Potassium Phosphate; Sodium Phosphate". www.clinicalkey.com. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.
  3. "Potassium Phosphate". www.clinicalkey.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபேட்டு_குறைநிரப்பி&oldid=3937460" இலிருந்து மீள்விக்கப்பட்டது