பாசுப்யுரேனைலைட்டு
யுரேனைல் பாசுப்பேட்டு கனிமம்
பாசுப்யுரேனைலைட்டு (Phosphuranylite) என்பது KCa(H3O)3(UO2)7(PO4)4O4•8(H2O) என்ற வேதி வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். யுரேனைல் பாசுபேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது [2][3][4].
Phosphuranylite | |
---|---|
ஆத்திரேலியாவின் தெற்கு அல்லிகேட்டர் ஆற்றில் கிடைத்த பாசுப்யுரேனைலைட்டு கனிமம் (10 மி.மீ தளத் தோற்றம்) | |
பொதுவானாவை | |
வகை | பாசுபேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | KCa(H3O)3(UO2)7(PO4)4O4•8(H2O) |
இனங்காணல் | |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள மிட்செல் மாகாணத்தில் பெக்மாடைட்டு வகை தட்டைப் பாறைகளில் பாசுப்யுரேனைலைட்டு காணப்பட்டதென 1879 ஆம் ஆண்டு பிரெடரிக் அகத்தசு கெந்து முதன் முதலில் விவரித்தார்.