பாஞ்சி

பரம்பரை பதிவுகள்

பாஞ்சிகள் அல்லது பாஞ்சி பிரபந்தம் என்பது அரித்துவாரில் உள்ள இந்து சமய மரபியல் பதிவேடுகளைப் போலவே மிதிலைப் பகுதியின் மைதிலி காயஸ்தர்கள் மற்றும் மைதிலி பிராமணர்களிடையே பராமரிக்கப்படும் விரிவான பரம்பரை பதிவுகள் ஆகும்.

பயன்பாடு தொகு

திருமணங்களை ஏற்பாடு செய்யும் போது பாஞ்சிகளுக்கு மகத்தான மதிப்பு உள்ளது. ஏனெனில் அவர்கள் மணமகன் மற்றும் மணமகனின் தந்தையின் பக்கத்திலிருந்து கடந்த 07 தலைமுறைகளையும், தாய்வழி பக்கத்திலிருந்து 06 தலைமுறைகளையும் வரையறுக்கிறார்கள்.

சௌரத் சபை தொகு

மைதிலி காயஸ்தர்களும், மைதிலி பிராமண பிரதிநிதிகளும் புதிய திருமண உறவுகளை ஆலோசிப்பதற்காக இந்தியாவின் மதுபானிக்கு அருகிலுள்ள சௌரத் என்ற இடத்தில் கூடி தங்களாது பாஞ்சிகளைன் பர்மபரையை முறையாகச் சரிபார்த்தனர். இந்த மாநாடு சௌரத் சபை என்று அழைக்கப்பட்டது [1]

தற்போதைய நிலை தொகு

பாஞ்சிகளின் முற்போக்கான இழப்பு, பஞ்சிக்காரர்கள் நவீன தொழில்களை மேற்கொள்வது மற்றும் அதிகரித்து வரும் அனைத்து மதக் கலப்பு நடத்தை காரணமாக, பாஞ்சிகளைக் கலந்தாலோசித்து திருமணத்தை நிச்சயப்படுத்தும் நடைமுறை அழிந்து வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாஞ்சை விற்ற வழக்குகளும் பதிவாகியுள்ளன. [2]. சமீபத்திய சௌரத் சபைகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடக்கின்றன.[3] பல நூற்றாண்டுகள் பழமையான பனை ஓலைகளை விட, இணையம் போன்ற நவீன முறைகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

veLi iNaibbukaL தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஞ்சி&oldid=3826885" இலிருந்து மீள்விக்கப்பட்டது